Home /News /lifestyle /

கொலாஜின் அடுக்குகள் முகத்திற்கு செய்யும் நன்மைகள் என்ன..? கட்டுக்கதைகளும்..உண்மைகளும்

கொலாஜின் அடுக்குகள் முகத்திற்கு செய்யும் நன்மைகள் என்ன..? கட்டுக்கதைகளும்..உண்மைகளும்

கொலாஜின் அடுக்கு

கொலாஜின் அடுக்கு

மாசுபாடு, மன அழுத்தம், புற ஊதாக் கதிர்கள் மற்றும் வயது போன்ற பல்வேறு காரணிகள் உடலில் கொலாஜன் உற்பத்தியைக் குறைக்கிறது.

மனித உடலானது புரதங்களால் ஆனது. இந்த புரதத்தில் மூன்றில் ஒரு பங்கில் கொலாஜன் என்று சொல்லப்படும் முக்கிய புரதம் உள்ளது. இவை தோல், தசை, எலும்புகள் போன்றவற்றிற்கு மிகவும் முக்கியமானது. பொதுவாக, இந்தக் கொலாஜன் எல்லா வகையான பாலூட்டிகளுக்கும் காணப்படும். இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. இது சருமத்தில் இலகுத்தன்மையை (elasticity) பராமரிப்பதற்கு உதவுகிறது. மேலும் தசைகள், முக்கிய உறுப்புகளின் கட்டமைப்பை வழிவகுக்கிறது.

இவை எலும்புகளைச் சுற்றியுள்ள மூட்டுகளை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. கொலாஜனின் மிக முக்கியமான வேலை அதன் இலகுத் தன்மையை பராமரித்து ஆரோக்கியமான மற்றும் கதிரியக்கங்களில் இருந்து சருமத்தை பாதுகாப்பதாகும். உங்கள் சருமத்தில் கொலாஜன் அளவு அதிகமாக இருந்தால், உங்கள் சருமம் இயல்பாகவே உறுதியாகவும் மிருதுவாகவும் தோன்றும். கொலாஜன் போதுமான அளவு உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் இளமையான சரும அமைப்பு இருப்பதற்கான காரணம் இதுதான்.

மாசுபாடு, மன அழுத்தம், புற ஊதாக் கதிர்கள் மற்றும் வயது போன்ற பல்வேறு காரணிகள் உடலில் கொலாஜன் உற்பத்தியைக் குறைக்கிறது. உண்மையில் 20 வயதிற்குப் பிறகு, உடலில் இயற்கையான கொலாஜன் உற்பத்தி படிப்படியாக குறைந்து விடுகிறது. தோல் சுருக்கங்கள், மெல்லிய கோடுகள், சீரற்ற தோல் நிறம் போன்ற வயதாவதற்கான அறிகுறிகளை உருவாக்கத் தொடங்குகிறது. உடலில் உள்ள கொலாஜனின் ஆரோக்கியமான அளவைப் பராமரிக்கவும், கதிரியக்க மற்றும் இளமை தோலைப் பராமரிக்கவும், சீரான அளவு கொலாஜன் உற்பத்தி உடலுக்கு அவசியமானது.



தாவரம் சார்ந்த ஊட்டச்சத்துக்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கக்கூடிய ஆரோக்கியமான வழிகளை வழங்குவதாக கூறப்படுகிறது. சிலர் கொலாஜன் உற்பத்திக்காக மாத்திரைகள் போன்று எடுத்து கொள்கின்றனர். இருப்பினும் சரியான அளவு அவற்றின் உற்பத்தி நடைபெறுவதில்லை. எனவே பலர் வீகன் வகை உணவுமுறையை பின்பற்றி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் தீங்கு இல்லாதது. இப்படி கொலாஜன் பற்றிய பல உண்மைகளும், கட்டு கதைகள் உள்ளன. இவற்றில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

கட்டுக்கதை: சருமம் மற்றும் மூட்டிற்கு மட்டும் கொலாஜன் முக்கியமானது

உண்மை: நமது மூட்டுகள் மற்றும் தோலுக்கு கொலாஜன் அவசியமானது என்பது உண்மைதான். இது பல செயல்பாடுகளையும் நன்மைகளையும் கொண்டுள்ளது. இது தசைகள், எலும்புகள் மற்றும் தோலை ஒன்றாகப் பிடித்து, அவை அனைத்தும் சீராக செயல்படுவதை உறுதி செய்வதன் மூலம் உடலுக்கு தேவையான இயற்கை பிசின் போல செயல்படுகிறது. கொலாஜன் நமது தோல், எலும்புகள் மற்றும் தசைகளின் இயற்கையான இலகு தன்மை மற்றும் மெல்லிய தன்மையைப் பாதுகாக்க உதவுகிறது. எனவே, கொலாஜன் என்பது தோல் மற்றும் மூட்டுகளின் பராமரிப்பு மட்டுமன்றி, உடலின் பல்வேறு இலகுவான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.

2022 ஆண்டின் பியூட்டி டிரெண்டுகள் இவைதான்...

 

கட்டுக்கதை: இழந்த கொலாஜனை மீண்டும் பெறுவது சாத்தியமில்லை

உண்மை: பொதுவாக ஒரு உடல் அதன் வாழ்நாள் முழுவதும் கொலாஜனை உற்பத்தி செய்ய முடியும். வயதாகும்போது உற்பத்தியாகும் அளவு மட்டுமே குறைகிறது. நாம் வயதாகும்போது கொலாஜனின் சரியான உற்பத்தியை உறுதிசெய்ய, வைட்டமின் சி அதிகம் உள்ள தாவர உணவுகள் எடுத்து கொள்ளலாம்.



கட்டுக்கதை: கொலாஜன் கிரீம்கள் தோலை இலகுவாக்க உதவும்

உண்மை: கொலாஜன் கிரீம்கள் நமது தோலில் கொலாஜன் அளவை ஓரளவு மட்டுமே அதிகரிக்கும். இதன் மூலக்கூறுகள் அளவு மிகவும் பெரியவை. அதாவது கொலாஜன் கிரீம்கள் தோலை பொலிவாக்க தோலிற்கு உள்ளே ஊடுருவ முடியாது. இருப்பினும் கொலாஜன் கொண்ட கிரீம்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்க உதவும். மேலும் இதை பயன்படுத்தினால் குறைந்த மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தோன்றும்.

கட்டுக்கதைகள்: கொலாஜன் மாத்திரைகள் உடனடி தீர்வு தரும்

உண்மை: கொலாஜன் மாத்திரைகள் இதன் உற்பத்திக்குத் தேவையான பல்வேறு செயல்பாடுகளை செய்கிறது. உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்த பொதுவாக 4-8 வாரங்கள் வரை எடுத்து கொள்ளும். பொலிவான மற்றும் இளமை சருமத்திற்கு, குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு தினமும் தாவர அடிப்படையிலான கொலாஜன் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips

அடுத்த செய்தி