• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • காலவதியான லிப்ஸ்டிக்கை எப்படி கண்டறிவது..? கவனிக்காமல் பயன்படுத்தினால் உண்டாகும் பாதிப்புகளை பற்றி தெரியுமா?

காலவதியான லிப்ஸ்டிக்கை எப்படி கண்டறிவது..? கவனிக்காமல் பயன்படுத்தினால் உண்டாகும் பாதிப்புகளை பற்றி தெரியுமா?

காலாவதியான லிப்ஸ்டிக்

காலாவதியான லிப்ஸ்டிக்

சிறந்த பிரண்டாக இருக்கும் பட்சத்தின் அதன் காலாவதி நாள் 12-18 மாதங்கள் வரை இருக்கும். அதற்கு மேல் அல்லது அதற்குள் அந்த லிப்ஸ்டிக் காலாவதியாகிவிட்டால் இந்த விஷயங்களை கவனியுங்கள்.

  • Share this:
சிலர் லிப்ஸ்டிக்குகளை பல நிறங்களில் வாங்கி குவித்து வைத்திருப்பார்கள். உடைக்கு ஏற்ப அப்ளை செய்வதால் சில லிப்ஸ்டிக்குகளை நீண்ட நாட்களுக்குப் பிறகே பயன்படுத்தக் கூடும். இதனால் அந்த லிப்ஸ்டிக்குகள் வருடக்கணக்கில் கூட வரும். ஆனால் அது காலாவதியாகிவிட்டதா என்பதை எத்தனை பேர் கவனிப்பார்கள்..? அவ்வாறு கவனிக்காமல் பயன்படுத்துவதால் வரும் பாதிப்புகளை பற்றி தெரியுமா..?

சிலர் அதிக விலை கொடுத்து வாங்கிவிட்டோம் என்பதற்காக தூக்கிவீச மனமில்லாமல் அப்படியே வைத்திருப்பார்கள். ஆனால் அதுதான் உங்களுக்கான ஆபத்தாக உருவாகும் என்பதையும் மறவாதீர்கள்.

லிப்ஸ்டிக்குகளின் காலாவதி நாள் :

  • சிறந்த பிரண்டாக இருக்கும் பட்சத்தின் அதன் காலாவதி நாள் 12-18 மாதங்கள் வரை இருக்கும். அதற்கு மேல் அல்லது அதற்குள் அந்த லிப்ஸ்டிக் காலாவதியாகிவிட்டால் இந்த விஷயங்களை கவனியுங்கள்.

  • லிப்ஸ்டிக்கின் பின்குறிப்பில் காலாவதி நாள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள்.

  • அதன் வாசனையை நுகருங்கள். வாசனை வாங்கியபோது இருந்ததற்கும் தற்போது வரும் வாசனைக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறியுங்கள். அவ்வாறு வாசனையானது மாறியிருந்தால் பயன்படுத்தாதீர்கள்.

  • லிப்ஸ்டிக் உருகுவது போல் இருந்தால் அல்லது மிகவும் வறண்டு போய் இருந்தால் பயன்படுத்தாதீர்கள். அது உதட்டில் அப்ளை செய்தாலும் தெரியும்.




இப்படியான விஷயங்களை கவனிக்காமல் பயன்படுத்தினால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?

அரிப்பு , எரிச்சல் : காலாவதியான லிப்ஸ்டிக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் அதன் பாக்டீரியா காரணமாக வாயை சுற்றிலும் அரிப்பு உண்டாக்கும். உதட்டை சுற்றிலும் ஒவ்வாமையை உண்டாக்கும்.

முகம், கழுத்து என மருக்கள் அசிங்கமான தோற்றத்தை உண்டாக்குகிறதா..? தானாக உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

காலாவதியான லிப்ஸ்டிக்கில் உள்ள லானோனின் வலுவான ஆற்றல் கொண்டது. இது தூசி, பாக்டீரியா, வைரஸ் மற்றும் கன உலோகங்களை காற்றில் இருந்து உறிஞ்சி, உதடுகளையும் பாதிக்கும். இதனால் லிப்ஸ்டிக் போட்டு சாப்பிடும்போதும், குடிக்கும்போதும் இவை உடலுக்குள் நுழைந்து நோயை உண்டாக்கும்.



லிப்ஸ்டிக்குகளிலும் அதிக அளவு ஈயம் மற்றும் காட்மியம் உள்ளது. காலாவதியான லிப்ஸ்டிக்குகளை பயன்படுத்துவது ஈய நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும் மற்றும் சிறுநீரக செயலிழப்பு, இரத்த சோகை, மூளை பாதிப்பு மற்றும் மூளை நரம்பியல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

லிப்ஸ்டிக்குகளில் உள்ள பிஹெச்ஏ உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பொருட்கள் புற்றுநோயைகூட உண்டாக்கும் என்கின்றனர். காலாவதியான லிப்ஸ்டிக்கை பூசினால் அது மார்பகக் கட்டிக்கும் வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.. எனவே ஒருவேளை காலாவதியான லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் உங்கள் தோல் மருத்துவரை அணுகவும்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: