ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

மெனிக்யூர் செய்வது ஆடம்பர செலவு இல்லை.. அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

மெனிக்யூர் செய்வது ஆடம்பர செலவு இல்லை.. அதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

மாதிரி படம்

மாதிரி படம்

நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நகத்தை வைத்தே உடலில் உள்ள பிரச்னைகளைக் கண்டறியலாம். நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தமாக எப்போதும் அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தற்போது இளம்பெண்கள் நெயில் பாலிஷ் மட்டும் அல்லாது நகத்தில் ஓவியம் வரைவது, வண்ணம் தீட்டி அழகுபடுத்துவதை கலையாக கருதுகின்றனர். மேலும் மேனிகியூர் செய்து நகங்களை அழகாக வைத்து கொள்வது தான் தற்போது பேஷன்.

மெனிக்யூர் (manicure) என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல, நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு சிறந்த சிகிச்சையாகும். கை, விரல், நகம் ஒப்பனைக் கலைதான் மெனிக்யூர் என அழைக்கப்படுகிறது. முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களை கவரும் பாகம் என்னவென்றால் அது கைகள் தான். ஏனெனில் முகத்திற்கு அடுத்தபடியாக மற்றவர்களின் பார்வைக்கு வெளிப்புறம் சட்டென தெரிவது கைகளும், விரல் நகங்களாகும். இவற்றை பராமரிக்கும் வழிதான் மெனிகியூர்.

இதனை அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து தான் செய்யவேண்டும் என்பது அல்ல, வீட்டில் இருந்தபடியே எளிதாக நாம் செய்யலாம்.

வீட்டிலேயே மெனிகியூர் செய்ய..

முதலில் கைவிரல் நகங்களில் நெயில் பாலிஷ் இருந்தால் அதை நல்ல தரமான நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு நீக்கிவிடுங்கள். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப நகங்களை ட்ரிம் செய்து வடிவமைத்து கொள்ளவும். நீளமான நகங்களை நீங்கள் வைக்க நினைத்தால் அது எளிதில் உடைய வாய்ப்புள்ளதால் மீடியமான வடிவத்தில் நகத்தை வெட்டிக் கொள்ளுங்கள். பின்னர் கைவிரல் நகங்களில் உள்ள க்யூட்டிக்கல்ஸில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதினால் கைவிரல் நகங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

கால்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்...!

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் ஷாம்பு மற்றும் ஒரு கைப்பிடியளவு ரோஜா இதழ்கள் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். இந்த கலவையில் உங்கள் இரண்டு கைகளையும் நனைத்து 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும். ஊறிய பிறகு கைவிரல் நகங்களை ஒரு டூத் பிரஷை கொண்டு சிறிது நேரம் தேய்த்து சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதினால் கைவிரல் நகங்களில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கி விடும்.

மெனிகியூர் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..

மெனிகியூர் செய்வதால் நகங்களில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு மட்டுமின்றி ரத்த ஓட்டமும் சீராகிறது. இது தசைகளில் வலி மற்றும் பதற்றத்தை குறைக்கும்.

நகத்தின் கீழ் பகுதில் உள்ள கருமையை நீக்க உதவுகிறது. இது மெனிகியூர் செய்வதால் உங்கள் கைகள் மற்றும் நகங்களில் உள்ள இறந்த செல்களையும், சருமத்தையும், வறண்ட தோல் பிரச்னையும் சரி செய்கிறது. நகங்களை உடையும் பிரச்னையும் குணமாகி உறுதியாக இருக்கும்.

நம்முடைய அன்றாட பணிகள் அனைத்தும் நம் கைகளைப் பயன்படுத்தாமல் முழுமையடையாது, கைகள் ஓய்வெடுக்க நேரம் கிடைக்காது. இதனால் உங்கள் நக அடுக்குகளில் அழுக்குகள் மற்றும் வலிகள் இருக்கும், மெனிகியூர் செய்வதால் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

டான் என்பது சருமத்தில் மட்டுமின்றி கை, நகங்களிலும் இருக்கும், நீங்கள் அடிக்கடி குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் மெனிகியூர் செய்வதால் டான் நீங்கிவிடும். இது உங்கள் கைகளிலும், விரல்களிலும் படிந்திருக்கும் பழுப்பு நிறத்தையும் அகற்ற சிறந்தது.

Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Hands, Legs, Manicure, Pedicure, Skincare