• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Skin Care | ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும் சரும பராமரிப்பு பொருட்கள்- நல்லதா? கெட்டதா?

Skin Care | ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கும் சரும பராமரிப்பு பொருட்கள்- நல்லதா? கெட்டதா?

பெரும்பாலும் alcohol denat என்று அழைக்கப்படும் எத்தனால், தோல் பராமரிப்பு வில்லனாக அடிக்கடி பார்க்கப்படுகிறது.

  • Share this:
நமது சரும பராமரிப்புகளுக்கு வைட்டமின் சி, ஈ, ஹையலூரோனிக் ஆசிட் மற்றும் செராமைட்ஸ் உள்ளிட்ட மூலப்பொருட்கள் ஆரோக்கியமானவை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் எந்த மூலப்பொருட்களும் சரும பராமரிப்புகளுக்கு அவ்வளவு சிறப்பானதா இல்லையா என்று சொல்வது கடினம். மாய்ஸ்சரைசர்கள் மற்றும் பாடி லோஷன்கள் முதல் டோனர்கள், க்ளென்சர்கள் வரை ஏறக்குறைய அனைத்து சரும பராமரிப்பு பொருட்களிலும் ஆல்கஹால் இருப்பதாக காண்பிக்கப்படுகிறது. இதனிடையே சரும பராமரிப்பில் ஆல்கஹால் என்பது பல கேள்விகளை எழுப்ப கூடிய ஒரு காம்போனென்டாக இருக்கிறது. ஆனால், சரும பராமரிப்பில் ஆல்கஹால் குறித்து பல்வேறு தகவல்கள் கூறப்படுகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆல்கஹால் அடங்கிய சரும பராமரிப்பு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கிறதா?

அழகு உலகை பொறுத்த வரை ஆல்கஹால் அநேகமாக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மூலப்பொருளாக இருந்து வருகிறது. நீண்ட காலமாக தோல் பராமரிப்புப் பொருட்களில் ஆல்கஹால் பாதுகாப்பான ஒரு மூலப்பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. நமது மாய்ஸ்சரைசர்கள் கெட்டு போவதை அல்லது துர்நாற்றம் வீசுவதை தடுக்கிறது ஆல்கஹால். ஆல்கஹாலை வைத்து ஃபேஷியல் செய்வதில் ஒயின் ஃபேஷியல் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஆல்கஹால் ஒருவரது சருமத்திற்கு நல்லதா அல்லது கெட்டதா என்பது அவரது தோல் வகையை பொறுத்தும் இருக்கிறது. அழகு சாதனப் பொருட்களில் ஆல்கஹால் கரைப்பான்களாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் alcohol denat என்று அழைக்கப்படும் எத்தனால், தோல் பராமரிப்பு வில்லனாக அடிக்கடி பார்க்கப்படுகிறது. இது அதிக செறிவாக இருக்கும் போது உலர் சருமம், எரிச்சல் மற்றும் தீங்கு விளைவிக்கும். சருமத்தின் இயற்கையான தடையை உடைப்பதன் மூலம், ஆல்கஹால் மற்ற வேதிப்பொருட்களை உறிஞ்சுவதற்கும் உதவும். இருப்பினும், அதிக ஆல்கஹால் டெனாட் ஃபார்முலாக்கள் தோல் தடையை சீர்குலைக்கும் மற்றும் இயற்கையான நீரேற்ற செயல்முறையைத் தொந்தரவு செய்யும்.

சரும பராமரிப்பில் ஆல்கஹாலை தவிர்க்க வேண்டுமா?

சரும பராமரிப்பில் இருந்து ஆல்கஹாலை முற்றிலுமாக அகற்ற முடியாது. இருப்பினும் அதை கட்டுப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்தலாம். தோல் பராமரிப்புக்கென்று பல வகையான ஆல்கஹால் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்துவ பயன்பாடு மற்றும் மாறுபட்ட விகிதங்களை கொண்டுள்ளன. எனவே, இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக பயன்படுத்தாமல் தவிர்க்க நினைக்க வேண்டாம்.

உங்கள் சரும பராமரிப்புப் பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் ஆல்கஹால் அளவு குறித்து நீங்கள் குழப்பமடைந்தால், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களின் கலவை விகிதம் மற்றும் ஆல்கஹால் விகிதத்தை சரிபார்த்து கொள்ளலாம். பராமரிப்பு பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் பொருட்களின் பட்டியலில் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கும் பொருள் முதலிலும், அடுத்தடுத்து குறைவான விகிதத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்கள் இடம் பெற்றிருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆல்கஹால் பட்டியலில் முதலிடத்தில் இருந்தால், அந்த தயாரிப்பு பொருளில் ஆல்கஹால் அதிக சதவீதத்தை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. ஆல்கஹாலில் இருக்கும் கெமிக்கல் பொருட்களின் கலவை தான் சரும பாதிப்புகளில் இருந்து விடுபட உதவுகிறது. ஆனால் நமது சருமம் மிகவும் மென்மையானது என்பதால் ஆல்கஹால் அடங்கிய சரும பராமரிப்புகளை அடிக்கடியோ அல்லது நீண்ட காலமோ பயன்படுத்துவதை தவிர்ப்பது பாதுகாப்பானது என்று தோல் நல நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Archana R
First published: