ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தீபாவளிக்கு அனைவரையும் உங்க அழகால கட்டிப்போடனுமா..? இப்போதிலிருந்தே இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...

தீபாவளிக்கு அனைவரையும் உங்க அழகால கட்டிப்போடனுமா..? இப்போதிலிருந்தே இந்த விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க...

 தீபாவளிக்கு பளபளப்பாக இருக்க டிப்ஸ்

தீபாவளிக்கு பளபளப்பாக இருக்க டிப்ஸ்

பண்டிகை காலங்களில் நீங்கள் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு வாரத்திற்கு அல்லது இரண்டு நாள்களுக்கு முன்னதாக பேசியல் அல்லது மாய்ஸ்சரைசர் செய்து கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றமும் இல்லை.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு உள்ள பெரும்பாலான பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அழகுக்கலையை தவிர வேறு எதுவும் இருக்காது. தான் கற்றுக் கொண்ட ப்யூட்டி டிப்ஸ்களை வைத்துத் தன்னை மட்டும் இல்லை தன்னைச்சுற்றி இருப்பவர்களையும் அழகாகக் காட்டுவதற்கு முயல்வார்கள்.

அதிலும் வீட்டில் ஏதேனும் சுப நிகழ்ச்சிகள் அல்லது பண்டிகைக் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்நாளில் எப்படியெல்லாம் சருமத்தைப் பராமரிக்கலாம் என மெனக்கெடுவார்கள். குறிப்பாக இயற்கையான முறையில் சருமத்தைப் பாதுகாக்க முயலும் பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகள் தோல் அழற்சி தான்.

சில நேரங்களில் அதிக வெயில் மற்றும் பனியின் காரணமாகவும் தோலில் ஒரு விதமான அழற்சி உண்டாகும். எரிச்சல் தன்மையும் சேர்ந்து வருவதால் தோல் பராமரிப்பிற்கு கற்றாழை அடங்கிய சரும கிரீம்கள் அல்லது பேஸ் வாஷ்களை உபயோகிக்கலாம். இதோடு தோலில் ஏற்படும் சரும பிரச்சனையைக் குறைப்பதற்கு வைட்டமின் பி3 நிறைந்த அழகுச் சாதனப் பொருள்கள் அல்லது உணவுகளை நீங்கள் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

சருமத்திற்கு க்ளென்சிங் செய்தல்: நம்மில் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஸ்கின் டோன் இருக்காது. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான தோல் வகைகள் உள்ளதால் அதற்கேற்ப பிரச்சனைகள் ஏற்படும். இந்நிலையில் அனைத்துச் சருமத்திற்கு ஏற்ற க்ளென்சரைப் பயன்படுத்த வேண்டும். வெளியில் செல்லும் போது ஏற்படும் சருத்துளைகளில் அடைத்திருக்கும் மாசுகளைச் சுத்தம் செய்யவும் க்ளென்சிங் செய்யப்படுகிறது. இது சருமத்தை அதிகமான வறண்டு போக விடாமல் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க உதவுகிறது.

Also Read : ஹேர் கலரிங் செய்திருந்தால் சுடு தண்ணீரில் தலை குளிக்க கூடாதா..? கலர் செய்த கூந்தலுக்கான ஹேர் கேர் டிப்ஸ்

இதோடு சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது எக்ஸ்போலியேட் செய்ய வேணடும். இவ்வாறு செய்வதன் மூலம் பண்டிகை நாள்களில் தெளிவான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெற முடியும். தீபாவளி பண்டிக்கைக்கு சில நாள்களுக்கு முன்னதாக நீங்கள் செய்யும் போது முகம் பளபளப்பாகும்.

பொதுவாக எண்ணெய் சருமம் பெண்களின் அழகைக் கெடுத்துவிடும். அதுவும் பண்டிகைக் காலங்களில் எண்ணெய் சருமத்தினால் சோர்வடைந்து இருப்பது போல் தெரியும். எனவே எண்ணெய் சருமம் இல்லாமல் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க மாய்சுரைசர் மிகவும் அவசியம். இதை நீங்கள் செய்ய முடியவில்லை என்றாலும் எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய், சாத்துக்குடி, நார்த்தைப் பழம், திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளையும், உலர் மூலிகைகள், பசலைக்கீரை, வேர்க்கடலை, ப்ரோக்கோலி, பிஸ்தா போன்ற வைட்டமின் ஈ நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் போது சருமத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

Also Read : நெருங்கும் பண்டிகை... உங்கள் சருமத்தை பளபளப்பாக்க நடிகையின் டிப்ஸ்..!

இதோடு தேவையற்ற பேஸ்வாஸ் கிரீம்களை அப்ளே செய்வதையும் தடுக்க வேண்டும். மேலும் பண்டிகை காலங்களில் நீங்கள் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு வாரத்திற்கு அல்லது இரண்டு நாள்களுக்கு முன்னதாக பேசியல் அல்லது மாய்ஸ்சரைசர் செய்து கொள்ளுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றமும் இல்லை.

Published by:Sivaranjani E
First published:

Tags: Deepavali, Diwali, Skin Care