• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • என் முடியை பார்த்து எல்லோரும் தெறித்து ஓடுவார்கள்.. காரணம் இதுதான்! ரகசியம் சொன்ன வெண்பா

என் முடியை பார்த்து எல்லோரும் தெறித்து ஓடுவார்கள்.. காரணம் இதுதான்! ரகசியம் சொன்ன வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா வெண்பா

இவரின் முடி ரகசியத்தில் முதலிடத்தில் இருப்பது பீர் வாஷ் தான். தலைக்கு பீர் கொண்டு வாஷ் செய்வாராம்

  • Share this:
    சின்னத்திரையில் நீளமான முடிக்கு சொந்தக்காரியாக சுற்றி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் நீளமான முடி ரகசியம் தெரிஞ்சிக்கலாமா?

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் வெண்பா பற்றி சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமே தேவையில்லை.
    நிறைமாத கர்ப்பிணியான இவரின் ஃபோட்டோஷூட் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும் துவண்டு போகாத அவர் தைரியமான பதில்களை கொடுத்து விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இவரின் கணவரும் இவருக்கு துணையாக நின்று மனைவிக்கு பக்க பலமாக இருக்கிறார். இவர்களின் திருமணம் காதல் திருமணம் ஆகும்.கர்ப்பமாக இருந்தும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் வில்லி தனம் பலரின் பாராட்டுக்களையும் வாங்கி தந்துள்ளது. ஆங்கரிங்கில் தனது பயணத்தை தொடங்கியவர் இன்று சின்னத்திரையில் மோஸ்ட் வாண்டட் வில்லியாக வலம் வருகிறார்.

    ஃபரீனா சின்னத்திரையில் நுழைந்த நாள் முதலே அவருக்கு அடர்த்தியான நீளமான முடி இருந்து வருகிறது. எந்த நேரத்திலும் தனது நீளமான முடியை வெட்ட ஃபரீனா சம்மதித்ததே இல்லையாம். சொல்லப்போனால் இவர் தனது முடியை ஒரு துப்பட்டா போலவே பயன்படுத்துவாராம். லோநெக் உடை அணியும் போது முடியை முன்னாடி போட்டுக்கொள்வாராம். முடிந்த வரை எப்போதுமே லூஸ் ஹேர்ஸ்டைலையே அதிகம் விரும்புவாராம். முடியை பராமரிப்பதில் ஃபரீனா எப்போதுமே அதிக கவனம் செலுத்த கூடிய நபராம்.

    இவரின் முடி ரகசியம் பற்றி தெரிந்து கொள்ளலாமா?  ரகசியத்தில் முதலிடத்தில் இருப்பது பீர் வாஷ் தான். தலைக்கு பீர் கொண்டு வாஷ் செய்வாராம். மாதத்திற்கு ஒருமுறை இப்படி செய்தாலே போதுமாம் முடி அடர்த்தியாக வளருமாம்.ஷைனிங் தருமாம். வாரத்திற்கு கட்டாயம் 2 முறை தலையில் எண்ணெய் வைத்து தலைக்கு குளிக்க வேண்டுமாம். வாரத்திற்கு ஒருமுறை தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலீவ் எண்ணெய் சேர்த்து முடிக்கு மசாஜ் செய்ய வேண்டுமாம்.



    அதுமட்டுமில்லை இவருக்கு நீளமான கூந்தல் என்பதால் ஷூட் இருக்கும் போது ஹேர் ஸ்டைலிஸ்டுகள் தெறித்து ஓடுவார்களாம். கர்லிங், ஸ்டெயினிங் செய்ய நேரம் எடுக்கும் என்பதால் பல நேரங்களில் இவர் எளிமையான ஹேர்ஸ்டைல்களை மட்டுமே தேர்ந்தெடுப்பாராம். முடிக்கு எண்ணெய் தேய்பதில் தொடங்கி ஷாம்பூ என தனி கவனம் எடுத்து செலவு செய்து பார்த்து வருகிறாராம். முடி வளர வேண்டும், கொட்ட கூடாது, அடர்த்தி தேவை என்று நினைப்பவர்கள் கட்டாயம் இந்த டிப்ஸ்களை ஃபலோ செய்யலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: