ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

காசு தான் வேஸ்ட்.. இதையெல்லாம் நம்பாதீர்கள்! முகப்பரு பிரச்சனையால் அவதிப்பட்ட முல்லை தரும் அட்வைஸ்

காசு தான் வேஸ்ட்.. இதையெல்லாம் நம்பாதீர்கள்! முகப்பரு பிரச்சனையால் அவதிப்பட்ட முல்லை தரும் அட்வைஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பெண்களுக்கு பருவ வயதில் முகப்பரு வருவது சாதாரண ஒன்று. அதை பெரிதுப்படுத்தாமல் அதன் மேல் கை வைக்காமல் இருந்தாலே போதும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை ரோலில் நடிக்கும் காவ்யா அறிவுமணி முகப்பரு பிரச்சனை பற்றி டீன் ஏஜ் பெண்களுக்கு சில் அட்வைஸ்களை வழங்கியுள்ளார்.

  ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அறிவு கதாபாத்திரம் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் காவ்யா அறிவுமணி. சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவுக்குப் பிறகு, முல்லையாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவரை மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், தற்போது காவ்யாவும் மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்திருக்கிறார். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் ஷேர் செய்யும் ஃபோட்டோக்கள், இன்ஸ்டா ரீல்ஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

  குறிப்பாக இவரின் ட்ரெஸிங் சென்ஸ் இந்த கால பெண்களை கவரும் வகையிலே உள்ளது. ஆடை மற்றும் மேக்கப் தேர்வில் தனி கவனம் செலுத்தும் காவ்யவும் ஒரு காலத்தில் மிகப் பெரிய முகப்பரு பிரச்சனையால் அவதிப்பட்டிருக்கிறார். அவரின் டீன் ஏஜ் வயதில் காலேஜ் படிக்கும் போதெல்லாம் முகம் முழுவது முகப்பருக்கள் நிறைய இருக்குமாம். அதை எப்படியாவது போக்கிட வேண்டும் என்று பல லோக்கல் டாக்டர்களிடம் சென்று பணத்தை செலவு செய்தாராம். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லையாம். கடைசியில் ஆரோக்கியமான உணவு மற்றும் டயட் மூலமே முகப்பரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

  இதுக்குறித்து அவர் பேட்டியில் கூறியிருக்கிறார். பெண்களுக்கு பருவ வயதில் முகப்பரு வருவது சாதாரண ஒன்று. அதை பெரிதுப்படுத்தாமல் அதன் மேல் கை வைக்காமல் இருந்தாலே போதும். தேவைப்பட்டால் அந்த இடத்தில் ஐஸ்கட்டிகளை வைக்கலாம். அதை மிகப் பெரிய பிரச்சனையாக மனதில் போட்டுக் கொண்டு டாக்டர்களிடம் சென்று செலவழிக்காமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ளுங்கள், கீரை பழங்கள் அதிகம் உண்ணுங்கள் என்கிறார்.

  ' isDesktop="true" id="626895" youtubeid="pn9XD4Neu30" category="beauty">

  அதே போல் ஆயீல் ஸ்கின் உள்ளவர்கள் நிறைய ஜன்க் ஃபுட்களை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்கிறார். எல்லா பிராண்டு சோப்பு, ஃபேஷ்வாஷ்களை பயன்படுத்தாமல் முகத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்துவது நல்லது என்கிறார். ஒருவேளை முகத்தில் கருத்திட்டு இருப்பது போல் தோன்றினால் வாரத்திற்கு ஒருமுறை முல்தானி மெட்டி போடலாம் முகத்திற்கு எந்த பாதிப்பும் வராது என்கிறார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Beauty Tips