இந்த சீப்பைக் கொண்டு தலை வாரினால் முடி அடர்த்தியாக வளருமாம்..! மன அழுத்தத்தைக் கூட போக்கும்..!

இந்த சீப்பைக் கொண்டு தலை வாரினால் முடி அடர்த்தியாக வளருமாம்..! மன அழுத்தத்தைக் கூட போக்கும்..!

குவாஷா சீப்பு

ஜேட் அல்லது குவாஷா சீப்பு கொண்டு தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த சீரான ரத்த ஓட்டத்தின் மூலம் மயிர்க்கால்கள் புத்துணர்ச்சி பெற்று தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்

  • Share this:
மன அழுத்தம் என்பது ஏதாவது ஒரு வழியில் அனைவரும் அனுபவிக்ககூடிய ஒன்றாக உள்ளது. இதில் இருந்து விடுபட யோகா, தியானம், உடற்பயிற்சி என பல பயிற்சிகள் இருந்தாலும், இன்னும் சிலர் சிம்பிளான டிப்ஸை எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில் சீன தெரபியான குவாஷா அல்லது ஜேட் தெரபி மன அழுத்தத்தை போக்கும் ஈஸியான பயிற்சியாக உள்ளது.

குவாஷா தெரபி

தற்போது பரவலாக பிரபலமாகி வரும் குவாஷா தெரபி, சீனாவில் பழங்காலத்தில் இருந்து நடைமுறையில் உள்ளது. ஜேட் அல்லது குவாஷா கற்களைக் கொண்டு செய்யப்படும் இந்த தெரபி மன அழுத்தத்தை போக்கி, ரிலாக்ஸாக உணர வைக்கும். ஜேட் கற்களைப் பொறுத்தவரையில் முகத்தில் தேய்க்கும்போதும், தலைமுடியை கோதும்போது நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. ஒருவிதமான அக்குபஞ்சர் முறையான இதனை கோம்பிங் தெரபி என அழைக்கின்றனர்.

ஜேட் அல்லது ரோஸ் குவார்ட்ஸ் கற்கள் சீப்பு போன்ற அமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. இந்தப் பெயரை கேட்கும்போதே உங்களுக்கு புரிந்திருக்கும். ரெகுலராக செய்யப்படும் தெரபி அல்ல. வாரம் ஒருமுறை இந்த குவார்ட்ஸ் கற்களைக் கொண்டு முகத்தை தேய்த்தும், தலையில் மசாஜ் செய்தும் அக்குபஞ்சர் செய்த உணர்வைப் பெறலாம். உச்சந்தலையில் செய்யப்படும் மசாஜ் ஆனது உள்ளங்கால் வரை பலனளிப்பதாக தெரிவித்துள்ளனர்.குவாஷா தெரபி செய்வதன் பயன்கள் :

ரிலாக்ஸாக உணர உதவும் (Helps Feel Relaxed)

தினசரி அலுவல்களில் அலைந்து திரிந்து வரும் நாம், நம்மை ரிலாக்ஸ் செய்துகொள்ள மசாஜ் சென்டர் சென்றுவர இயலாத சூழ்நிலையில் இருப்போம். அதுபோன்ற தருணங்களில் வாரம் ஒருமுறை இந்த தெரபியை செய்வதன் மூலம் ரிலாக்ஸான பீலிங்ஙை கொடுக்கும். மேலும், ஒரு ஸ்பா சென்டர் சென்று வந்த உற்சாகத்தை உணர்வீர்கள். பொருளாதார ரீதியாகவும் நமக்கு ரிலாக்ஸ் கொடுக்கும்.

முடிவளர்ச்சியை மேம்படுத்தும் (Improves Hair Growth And Texture)

இந்த ஜேட் அல்லது குவாஷா சீப்பு கொண்டு தலையை கோதி விடுவதால், மயிர்க்கால்கள் தூண்டிவிடப்பட்டு அதன் ஆற்றல் அதிகரிக்கும். இதன் மூலம் முடியின் வளர்ச்சி அதிகரிப்பதுடன், முடியின் தோற்றத்தையும் அழகாக்கும். தலைமுடி உதிர்வு மற்றும் வளர்ச்சி குறித்து கவலைப்படும் பெண்கள் இந்த யுக்தியை ட்ரை செய்யலாம். எந்தவித பக்கவிளைவும் இன்றி ஒரு நல்ல பலனைக் கொடுக்கும்.மனஅழுத்தத்தைக் குறைக்கும் (Releases Tension)

கொரானா தொற்றின் பரவல் காரணமாக, நாம் அனைவரும் பொருளாதார ரீதியாகவும், பிசிகலாகவும் பல்வேறு மனஅழுத்தங்களுக்கு ஆளாகிறோம். மேலும் அதைப்பற்றியே நினைத்து மனதை அழுத்திக்கொண்டிருக்கும் தருணங்களில், ஜேட் அல்லது குவாஷா சீப்பு கொண்டு தலையை கோதி விடுவதன் மூலம் எளிமையாக மனஅழுத்தத்தைக் குறைத்து புத்துணர்ச்சியைப் பெறலாம்.

தலைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் (Improved Blood Circulation In The Scalp)

ஜேட் அல்லது குவாஷா சீப்பு கொண்டு தலையை மசாஜ் செய்வதன் மூலம், தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இந்த சீரான ரத்த ஓட்டத்தின் மூலம் மயிர்க்கால்கள் புத்துணர்ச்சி பெற்று தலைமுடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதுடன் அனைத்துவிதமான மனஅழுத்தத்திலிருந்தும் விடுபட உதவும்.ஜேட் அல்லது குவாஷா சீப்பு பயன்படுத்தும் முறை (How To Use ?)

ஜேட் அல்லது குவாஷா சீப்பு கொண்டு தலையை மசாஜ் செய்யும்போது, தலையின் ஒரு பகுதியில் ஆரம்பித்து காது வரை கொண்டுவந்து முடிக்க வேண்டும். சிறு சிறு சர்க்கில் ஷேப்பில் மிருதுவாக, தலை முழுமைக்கும் செய்ய வேண்டும். நம் தலைமுடியின் தன்மையைப் பொருத்து, டிரை ஹேராகவோ, ஆயில் அப்ளை செய்தோ செய்யலாம். ஜேட் அல்லது குவாஷா சீப்பை முன்பே கூறியதுபோல், ரெகுலராக பயன்படுத்தக்கூடாது. வாரம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த சீப்பை முடியை சிக் எடுக்கவோ, அழகுபடுத்திக்கவோ பயன்படுத்த முடியாது. மென்மையாக சில நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய மட்டுமே பயன்படுத்த முடியும். தலையில் வலி ஏற்படுவது போன்று உணர்ந்தால் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published: