பெண்கள் மற்றும் ஆண்கள் என யாராக இருந்தாலும் தங்களுடைய முகத்தை பிரகாசமாக வைத்துக் கொள்வதற்கு சோப்பு போடும் பழக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கேற்றால் போல் உங்கள் சருமம் பிரகாசமாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்றால் எங்களது தயாரிப்பு சோப்புகளைப் பயன்படுத்திப் பாருங்கள் என்பது போன்ற விளம்பரங்களையெல்லாம் நாம் பார்த்திருப்போம்.
இதோடு பல விதமான வண்ணங்கள், அளவுகள் போன்றவற்றில் சந்தையில் விற்கப்பட்டாலும் இவையெல்லாம் நம்முடைய உடல் நலத்திற்கு சரியானத் தேர்வா? என்பது குறித்து நிச்சயம் யோசிக்க மாட்டோம். ஆனால் ஒவ்வொரு முறையும் சோப்புகளைக் கையாளும் போது கவனமுடன் இருக்க வேண்டும் என்கிறார் தோல் நிபுண மருத்துவர் ஸ்வாதி அகர்வால். மேலும் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர்.
சோப்பு போட்டு முகம் கழுவும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
நாம் முகத்தை அழகாக்குவதற்கு மற்றும் சுற்றுச்சூழலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சோப்புகளை பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் சோப்புகளில் உள்ள PH அளவை நாம் கவனிக்க மாட்டோம். பொதுவாக பி.ஹெச் என்பது நாம் பொருளில் உள்ள அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை இரண்டின் சமநிலை விகிதத்தின் குறியீடாகும். ஆனால் ஒவ்வொரு சோப்பிலும் PH அளவு 5.5 இருந்தால் மட்டும் தான் சருமத்தில் ஈரப்பசை குறைவாகவே இருக்கும்.
இதோடு சருமத்தில் கிருமிகளின் வளர்ச்சியைக் கட்டுபடுத்துவதோடு நோய் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.ஆனால் நாம் பயன்படுத்தும் சோப்புகளின் பி.ஹெச் 7-9 அளவிலேயே இருக்கிறது. இதனால் பருக்கள் அதிகளவில் உருவாகவும், சரும எரிச்சல் மற்றும் சருமத்தில் வறட்சியையும் ஏற்படுத்துகிறது. எனவே நாம் சோப்புகளை எப்போது வாங்கினாலும் இந்த பி.ஹெச் அளவை சரியான கவனித்துக் கொள்ள வேண்டும்.
சோப்பு பயன்படுத்தும் முறை:
தோல் நிபுண மருத்துவர்கள் தெரிவித்த கருத்தின் படி, எப்போதும் முகம் கழுவும் சோப்புகளை வாங்கினாலும் நாம் பி.ஹெச் அளவை சரியாக கவனித்து வாங்க வேண்டும். மேலும் நீங்கள் சோப்பை சருமத்தில் நேரடியாகத் தேய்க்கக்கூடாது. நீங்கள் கைகளில் சோப்பைத் தடவி, கைகளால் முகத்தில் அப்ளே செய்து தண்ணீரால் கழுவ வேண்டும். இதோடு 2-5 நிமிடங்களுக்கு மேல் முகங்களை சோப்பு போட்டு கழுவும் போது சருமம் நிச்சயம் பாதிப்படையும்.
Also Read : காற்று மாசுபாட்டால் சிவப்பாகும் கண்கள்... தற்காத்துக்கொள்ளும் வழிகள் என்ன..?
எண்ணெய் பிசுபிசுப்பு மற்றும் பருக்கள் நிறைந்த சருமம் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின் படி சோப்பை நீங்கள் தேர்வு செய்ய வெண்டும்.
மேலும் தினமும் இரண்டு முறை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவினால் அழுக்குகள் நீங்கும். இருந்தப்போதும் சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் பேஸ் வாஷ் மற்றும் சோப்பின் தன்மையை ஆராய்வது அவசியம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.