நம்மில் பெரும்பாலானோர் தினமும் குளிக்கும் பழக்கம் உடையவர்கள் தான். எனினும் ஒரு சிலர் தினமும் குளித்தாலும் தலைக்கு குளிக்க மாட்டார்கள். வாரம் ஒருமுறை தான் தலைக்கு குளிப்பார்கள். எனினும் அதே நேரம் சிலர் தினமும் தலைக்கு தண்ணீர் ஊற்றாமல் இருக்க மாட்டார்கள்.
ஆனாலும் பல ஆண்டுகளாக தொடரும் ஒரு கேள்வி தினமும் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பது சரியா, தவறா? இந்த கேள்விக்கு பிரபல நிபுணர்கள் என்ன பதில் அளித்துள்ளார்கள் என்பதை இங்கே பார்க்கலாம். பிரபல டெர்மட்டாலஜிஸ்ட் நிபுணரான டாக்டர் அபிஷேக் பிலானியிடம் இதுபற்றி கேட்ட போது அவர் கூறியதாவது, "ஒருவரது கூந்தலானது அமைப்பு மற்றும் தரத்தில் நார்மலாக இருக்கிறது என்னால் தினமும் தலைக்கு குளிக்காமல் சில நாட்களுக்கு ஒருமுறை வாஷ் செய்து கொள்ளலாம்.
ஆனால் அதிக தூசி மற்றும் அழுக்குகளை ஈர்க்கும் கூந்தலை (fine hair) கொண்டவர்கள், அடிக்கடி தீவிர வேலைகளில் ஈடுபடுபவர்கள், வேலை காரணமாக வியர்வையை உற்பத்தி செய்பவர்கள், குறிப்பாக ஈரப்பதமான தட்பவெப்ப நிலையில் வசிப்பவர்கள், வேலை நிமித்தமாக வெளியில் பயணம் செய்து கொண்டே இருப்பவர்கள் இதற்கு விதிவிலக்கு. ஏனென்றால் இவர்களின் கூந்தல் அதிக அழுக்கு மற்றும் மாசுபாடுகளுக்கு எளிதில் வெளிப்படுகிறது. எனவே இவர்கள் அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டும்" என்கிறார்.
ஷாம்புவை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும் என்பதை விட தோல் பராமரிப்பில் சில கேள்விகள் உள்ளன. மற்றொரு பிரபல டெர்மட்டாலஜிஸ்ட் நிபுணரான டாக்டர் அக்னி குமார் போஸ் பேசுகையில் ஒரு ஆய்வை மேற்கோள் காட்டி விளக்கம் அளித்துள்ளார். "3 மாத காலப்பகுதியில் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸில் 2 கட்டுரைகள் வெளியாகின. அதில் ஒன்று தலைமுடி அடிக்கடி வாஷ் செய்வதை பற்றியது மற்றொன்று அதற்கு நேர் எதிரானது.
இதற்கு காரணம் என்னவென்றால் இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்த அல்லது மறுக்க அப்ஜெக்ட்டிவ் சயின்டிஃபிக் டேட்டாக்கள் மிக குறைவாகவே உள்ளன. கடந்த 2021 -ஆம் ஆண்டில் தினசரி முதல் 1 வாரத்திற்கு ஒருமுறை ஹேர் வாஷ் செய்வதன் தாக்கத்தை கண்டறிய ஒரு அறிவியல் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
- அதிக முறை தலைக்கு குளித்தவர்களுக்கு குறைந்த அரிப்பு மற்றும் வறட்சியே இருந்தது
- அடிக்கடி தலை குளிப்பதால் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையின் வளர்ச்சி - Malassezia குறைந்துள்ளது
- செபம் திரட்சியின் குறைக்கப்பட்ட ஆக்சிடேட்டிவ் ஸ்ட்ரஸ் காரணமாக தலைமுடிக்கு சிறந்த பாதுகாப்பு க்யூட்டிகுலர் பேரியர் இருந்தது
- 2 நாட்களுக்கும் குறைவான ஹேர் வாஷ் செய்வது வாரத்தில் 3-க்கும் குறைவான பேட் ஹேர் டேஸை கொண்டிருந்ததாகவும், தினசரி ஹேர் வாஷ் செய்வது 5 கிரேட் ஹேர் டேஸ்களுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் முடிவை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால் அதிகப்படியான ஷாம்பு பயன்பாட்டால் முடி சேதமடையும் என்பது அறிவியல் ரீதியாக மறுக்கப்பட்டுள்ளது. எனவே லேசான க்ளென்சர் மற்றும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒரு தயாரிப்பை பயன்படுத்துங்கள், அது போதும். ஒருவர் தனது தலைமுடியை எப்போது வேண்டுமானாலும் பாதுகாப்பான தயாரிப்பை கொண்டு வாஷ் செய்யலாம். அறிவியல் சான்றுகள் இதற்கு வலு சேர்த்துள்ளன என்கிறார் போஸ்.
Also Read : நீளமான, அடர்த்தியான கூந்தலுக்கு இந்த 5 ஆயில்களை மிக்ஸ் செய்து பயன்படுத்தி பாருங்கள்!
தினசரி பின்பற்ற வேண்டிய ஹேர் கேர் டிப்ஸ்:
தினசரி முடி பராமரிப்பு விதிகளில் 2 விஷயங்கள் முக்கியமானவை. ஒன்று அகலமான பல் சீப்பை பயன்படுத்த வேண்டும். மற்றொருன்று முடி ஈரத்துடன் இருக்கும் போது சீவ கூடாது என்கிறார் பிலானி.
ஹேர் ட்ரையரை அடிக்கடி பயன்படுத்துவது தலைமுடியை உலர்த்தி எளிதில் உடைய கூடியதாக மாற்றும்.
ஷாம்பு கொண்டு உச்சந்தலையை மட்டும் அலசவும். கூந்தல் முனைகள் அசுத்தமாக இல்லாவிட்டால் ஷாம்புவை பயன்படுத்தாதீர்கள்.
கூந்தல் முனைகளுக்கு எப்போதும் கண்டிஷனரை பயன்படுத்துங்கள்.
ஒரே நாள் அல்லது இரவில் தலைமுடிக்கு ஒரு முறைக்கு மேல் எண்ணெய் தடவ வேண்டாம், அதிக எண்ணெயும் பயன்படுத்த வேண்டாம்.
முடி தடிமனாக, சுருளாகவும் இருந்தால் அதற்கேற்ற டிசைன் கொண்ட பொருட்களை பயன்படுத்த பரிந்துரைக்கிறார் பிலானி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair, Hair care, Hair Problems