15 நிமிடத்தில் உங்கள் முகம் பொலிவு பெற டிப்ஸ் இதோ..

காட்சி படம்

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, உடனடியாக உங்கள் சருமத்தை பொலிவு பெறச் செய்யலாம்.

 • Share this:
  நண்பர்களுடன் போட்ட கடைசி நேர பிளான் என்பதால், பார்லர் போக முடியவில்லையே என வருத்தத்துடன் இருக்கிறீர்களா? டோன்ட் வொர்ரி... வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, உடனடியாக உங்கள் சருமத்தை பொலிவு பெறச் செய்யலாம். அதில் சிலவற்றை இங்கே தருகிறோம்..

  அவகேடோ மற்றும் தயிர்:

  அவகேடோ பழத்தை மசித்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள வறட்சி நீங்கி, முகம் பொலிவோடு மின்னும்.

  கடலை மாவு:

  கடலை மாவுடன் மஞ்சள் அல்லது கடலை மாவுடன் சிறிது அளவு பால் மற்றும் நீர் கலந்து முகத்தில் தடவி, உலர்ந்த பின்பு இதமான நீரில் முகம் கழுவுங்கள். அதன் பின்பு சுழற்சி முறையில் உங்களது முகத்தை நன்கு தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் உங்களது முகம் பிரகாசம் அடையும்.

  ஓட்ஸ் மற்றும் தயிர்:

  ஓட்ஸ் மற்றும் தயிரை கலந்து உங்களது முகத்தில் உபயோகப்படுத்தி சுழற்சி முறையில் தேய்த்து மசாஜ் செய்வதன் மூலம் முகத்தில் தங்கி இருக்கும் இறந்த செல்கள் நீங்கும். இதன் மூலம் முகம் பொலிவடையும்.

  எலுமிச்சை சாறு:

  சருமத்தை எப்படி இயற்கையாக பொலிவடைய செய்ய முடியும்? எலுமிச்சை சாற்றினோடு கொஞ்சம் சர்க்கரையை சேர்த்து முகத்தில் தடவி 1௦ நிமிடங்கள் நன்றாக சுழற்சி முறையில் தேய்த்துவிட்டு, பின் இதமான நீரில் முகம் கழுவினால் உங்களது முகம் தானாகவே பொலிவடையும்.

  Also read : கூந்தலின் அடர்த்தியை அதிகரிக்க இதை மட்டும் தவறாமல் பின்பற்றுங்கள்..

  பாதாம்:

  பாதாம் பருப்பை தூளாக்கி அதனுடன் பால், ஓட்ஸ் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால் முகத்தின் நிறத்தை மாற்றி பொலிவைக் கூட்டுகிறது.

   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: