Home /News /lifestyle /

மாசு, மருவில்லா பளிச்சென்ற சருமம் வேண்டுமா..? இந்த ஒரு பொருள் மட்டும் போதும்! 

மாசு, மருவில்லா பளிச்சென்ற சருமம் வேண்டுமா..? இந்த ஒரு பொருள் மட்டும் போதும்! 

தேன்

தேன்

வீட்டிலேயே செய்யக்கூடிய அழகு குறிப்புகள் என வரும் போதும், கண்டிப்பாக அதில் தேனுக்கு தனி இடம் உண்டு. தேனில் அளவுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, அதீத அழகியல் நன்மைகளும் உள்ளன.

பருக்கள், தழும்புகள், வடுக்கள், கரும்புள்ளிகள் இல்லாத மென்மையான சருமத்தை பெற வேண்டுமென அனைத்து பெண்களும் விரும்புகின்றனர். இதற்கு ஆயிரங்களை செலவழித்து அழகு சாதனங்களை வாங்க வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே கிடைக்கக்கூடிய, குறிப்பாக நமது சமையல் அறைகளில் பயன்படுத்தக்கூடிய பொருட்களே போதும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய அழகு குறிப்புகள் என வரும் போதும், கண்டிப்பாக அதில் தேனுக்கு தனி இடம் உண்டு. தேனில் அளவுக்கு அதிகமான மருத்துவ குணங்கள் மட்டுமல்ல, அதீத அழகியல் நன்மைகளும் உள்ளன. தேன் ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலப்பொருள் ஆகும்.

அதனால் தான் பல ஆண்டுகளாக நமது அழகு குறிப்புகளில் தேனுக்கு என்று தனி இடம் உள்ளது. தேன் அதன் இயற்கையான வடிவத்தில், என்சைம் செயல்பாடு, தாவரப் பொருட்கள் மற்றும் நேரடி பாக்டீரியாக்கள் இணைந்து நூற்றுக்கணக்கான நடைமுறை பயன்பாடுகளுடன் ஒரு சக்திவாய்ந்த மூலப்பொருளாக விளங்குகிறது. பேஸ்டுரைஸ் செய்யப்படாத தேன் தோலில் மேற்பூச்சு பயன்பாட்டிற்கு மிகவும் நல்லது.

தேனை அழகு குறிப்புகளில் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான நன்மைகளைப் பெறலாம் என தோல் மற்றும் அழகு கலை நிபுணர்கள் கூறும் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்...



தேனைக் கொண்டு செய்யக்கூடிய எளிதான பேக்குகளுடன், அதனால் கிடைக்க கூடிய சருமத்திற்கான நன்மைகள் இதோ...

- திறந்த துளைகள் நிறைய தூசி, அழுக்கு மற்றும் மாசுபாட்டிற்கு ஆளாகும். இவை அனைத்தும் முகப்பரு, கருமை மற்றும் வறண்ட சருமத்திற்கு வழிவகுக்கும். தேன் ஒரு இயற்கை அஸ்ட்ரிஜென்டாக செயல்படுகிறது, இது துளைகளை சுருக்கவும் மற்றும் பிரேக்அவுட்கள் ஏற்படுவதை குறைக்கவும் உதவுகிறது. தக்காளி சாறு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, தினமும் 10 நிமிடங்களுக்கு சருமத்தில் தடவினால், முகத்தில் திறந்திருக்கும் துளைகள் அடைக்கப்படும்.

முகத்தில் வேக்சிங் செய்வதால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள் என்னென்ன..? தெரிந்து கொள்ளுங்கள்

- ஒரு துளி தேனுடன் மசிக்கப்பட்ட கிவி பழம் மற்றும் ஒரு டீஸ்பூன் ஓட்ஸைக் கலந்து கொள்ளவும். இந்த பேக்கை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவலாம். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள சோர்வு மற்றும் கருமை, மந்தம் போன்றவற்றை நீக்க உதவும்.

- ஒரு கப் பப்பாளியை மசித்து, கூழாக ஆக்கி, அத்துடன் 1-2 டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலந்துகொள்ளவும். இந்த மென்மையான பேஸ்ட்டை உங்கள் முகத்தில் அப்ளே செய்து, சுமார் 15-20 நிமிடங்கள் விட்டுவிட்டு குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேக் உங்களுக்கு உடனடி பொலிவை தரும்.



- தேன் உங்கள் உடலின் குணப்படுத்தும் செயல்முறைக்கு உதவுகிறது, இது முகப்பரு வடுக்களை மறைய உதவும். உங்கள் வடுக்கள் உள்ள இடத்தில் தேனை ஒரு பேஸ்டாக தினமும் அல்லது ஒவ்வொரு நாளும் தடவி வந்தால், அது முகப்பரு தழும்புகளுக்கு சிகிச்சையாக பயன்படும் அல்லது பாதாம், தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைப் பயன்படுத்தியும் பேக் செய்து பூசலாம். 1 டேபிள் ஸ்பூன் தேனுடன், 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளவும். அதை உங்கள் முகத்தில் தடவி, உலர்ந்ததும் மெதுவாக துடைத்து எடுக்கவும்.

உங்கள் முகத்திற்கு ஐஸ் கட்டிகளை அப்ளை செய்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா.?

தேன் சருமத்திற்கு மேல் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. இதன் மூலம் பளபளப்பான சருமத்தை வெளிப்படுத்த முடியும். சோப்பு மற்றும் தண்ணீருடன் உங்கள் முகத்தை கழுவிய பின், மனுகா தேன் அல்லது பேஸ்டுரைஸ் செய்யப்படாத, பச்சையான தேனை உங்கள் முகத்தில் தடவவும்.பின்னர் சில நிமிடங்கள் கழித்து மென்மையான துணியால் முகத்தை மெதுவாக துடைத்து எடுக்கவும். இது சரும பொலிவை அதிகரிக்க உதவுகிறது.

- சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்ய எலுமிச்சை சாறு, சர்க்கரை மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, சருமத்தின் மீது ஸ்கிரப் செய்யவும். பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது உங்கள் துளைகளை ஆழமாக சுத்தம் செய்து புதிய தோற்றத்தை கொடுக்கும்.



- தேன் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதில் சிறப்பாக செயல்படக்கூடியது. எனவே வறண்ட சருமம் உள்ளவர்கள் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பச்சை பாலுடன் கலந்து கொள்ளுங்கள். அந்த கலவையில் பருத்தி பஞ்சை நனைத்து முகத்தில் தடவவும். அதனை நன்றாக உலர விட்டு, பின்னர் மென்மையான துணியால் துடைத்து சுத்தப்படுத்துக் கொள்ளலாம். இதை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை செய்தால் நல்ல ரிசல்ட் கிடைப்பதை கண்கூடாக உணரலாம்.

- வயதான தோற்றத்தை மாற்றவும் தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் ½ டீஸ்பூன் பெருஞ்சீரகம் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் பச்சை தேன் கலந்து கொள்ளவும். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து, அதனை முகத்தில் அப்ளே செய்து 20 நிமிடங்கள் காய விடவும். அதன் பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். தேன், ஓட்ஸ் மற்றும் தயிர் ஆகியவை உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்து, நிறத்தை மீட்க உதவுகிறது. பெருஞ்சீரகம் விதைகள் வயதான தோற்றத்தை எதிர்த்து போராடுகிறது. மேலும் இந்த ஃபேஸ் பேக் முகத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும்புள்ளிகளை சரி செய்ய உதவுகின்றன.
Published by:Sivaranjani E
First published:

Tags: Beauty Tips, Honey

அடுத்த செய்தி