• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • நம்ப முடியாத மாற்றம்.. தயிர், முல்தானி மெட்டிக்கு நன்றி சொல்லும் இதயத்தை திருடாதே சஹானா!

நம்ப முடியாத மாற்றம்.. தயிர், முல்தானி மெட்டிக்கு நன்றி சொல்லும் இதயத்தை திருடாதே சஹானா!

இதயத்தை திருடாதே சஹானா

இதயத்தை திருடாதே சஹானா

கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது சீரியல் வாய்ப்பு கிடைத்தது

  • Share this:
    சின்னத்திரை கனவு கன்னியாக வலம் வரும் இதயத்தை திருடாதே புகழ் ஹிமா பிந்துவின் அழகு ரகசியங்கள்.

    இதயத்தை திருடாதே சீரியலில் சஹானா கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஹிமா பிந்து. இவரின் சொந்த ஊர் ஆந்திரா. இவரின் மொத்த குடும்பமும் கலைக் குடும்பம் தான்.பேஷன் டிசைனிங் முடித்த உடனே பிந்துவுக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போது சீரியல் வாய்ப்பு கிடைத்தது. ‘ஐஆர் 8’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அதனைத்தொடர்ந்து கலர்ஸ் சேனலின் இதயத்தை திருடாதே சீரியலில் சஹானா ரோலில் நடித்தார்.

    இந்த கதாபாத்திரம் அவருக்கு நல்ல ரீச் கொடுத்தது. மராத்தியில் ஒளிப்பரப்பான ஹிட் சீரியலின் தமிழ் ரீமேக் தான் இதயத்தை திருடாதே. மோதலில் தொடங்கி காதல் என்பது போல் இந்த சீரியலில் சிவா - சஹானா ஜோடியை ரசிகர்கள் பயங்கரமாக ரசிக்க தொடங்கினர். சிவா மற்றும் சஹானா ஆகிய இருவருக்கும் இடையேயான காதல் காட்சிகளுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இவர் தனது முகத்திற்கு செய்யும் அழகு குறிப்புகள் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.

    7 நாட்களும் ஷூட்டிங்கில் மேக்கப் போட்டு இருப்பதால் அவர் முகத்தை கட்டாயம் பராமரிக்க வேண்டுமாம். இதற்காக அவர் பியூட்டி பாலர் செல்வது இல்லையாம், வீட்டில் முல்தானி மெட்டி மற்றும் தயிர் கலந்த பேக்கை தான் முகத்திற்கு அதிகம் போடுவாராம். அதுமட்டுமில்லை மேக்கப்பை எப்போதுமே பேபி ஆயில் கொண்டு தான் ரிமூவ் செய்வாராம். அதனால் தான் அவரின் முகத்தில் எண்ணெய் பசை குறையால் முகம் எப்போதுமே பளீச்சென்று இருக்கிறதாம்.



    அடுத்தது கருவளையத்திற்கு ஆலுவேரா ஜெல்லை தான் யூஸ் பண்ணுவாராம். அதே போல் ஐஸ் கட்டிகளை தினமும் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்வாராம். ஒருநாள் கூட முகத்தில் ஐஸ் கட்டிகளை கொண்டு ஸ்க்ரப் செய்ய தவறியது இல்லையாம். இரவில் பாதாம் , முந்திரி நட்ஸ்களை தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுவும் முகத்திற்கு அழகு தருமாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: