ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கருவளையங்கள் முதல் முகப்பருக்கள் வரை... சருமப்பிரச்சனைக்கு உதவும் காபி பவுடர்..!

கருவளையங்கள் முதல் முகப்பருக்கள் வரை... சருமப்பிரச்சனைக்கு உதவும் காபி பவுடர்..!

காப்பித்தூள்

காப்பித்தூள்

காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்கள் உள்ளதால், ஆரோக்கியமான சரும செல்களைப் பாதிக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடுகிறது. இதோடு சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் உதவியாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

காபியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்கள் போன்ற சத்துக்கள் உள்ளதால், ஆரோக்கியமான சரும செல்களைப் பாதிக்கக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடுகிறது. இதோடு சருமத்தில் உள்ள பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் உதவியாக உள்ளது.

நம்மில் பலருக்கு காலையில் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போதே காபி குடித்தால் தான் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க முடியும் என்ற எண்ணம் தோன்றும். காஃபின் உங்கள் இரத்த நாளங்களை விரிவாக்க உதவுவதோடு உடலை சோம்பலாக்குவதில்லை. இதனால் தான் காபியை பலரும் பருக ஆரம்பிக்கிறார்கள். ஆனால் காபி பவுடர் உங்களது சருமத்தைப் பாதுகாக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நிச்சயம் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

காபியில் இயற்கையான ப்ளீச்சிங் தன்மை உள்ளதால் கருவளையம் முதல் முகப்பருக்கள் வரை சரி செய்ய உதவுகிறது. வேறு என்னென்ன சருமப்பிரச்சனைக்குத் தீர்வு காண்கிறது என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் காஃபி:

கண்கள் பாதுகாப்பு: காபியில் அழற்சி எதிர்ப்புக் குணங்கள் உள்ளதால், கண்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கண் அழற்சியை சரி செய்ய உதவுகிறது. நேரடியாக காஃபியைப் பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீர் மற்றும் அரைத்த காபி கலவையை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பருத்தித் துணி அல்லது காட்டனை வைத்து கண்கள் வீங்கிய இடத்தில் தடவ வேண்டும்.

Also Read : உங்க முகம் டல்லா இருக்குனு ஃபீல் பண்றீங்களா..? ஒரே இரவில் பொலிவு தரும் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..

கருவளையத்திற்குத் தீர்வு : கருவளையங்களுக்கு சிகிச்சையளிக்க மற்ற மருத்துகளை விட காபி சிறந்ததாக உள்ளது. இதற்கு முதலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் காபி தூளை எடுத்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தில் அப்ளை செய்து சுமார் 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே வைக்க வேண்டும். தொடர்ந்து குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு கருவளையங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.

முகப்பரு சிகிச்சை: பெண்களுக்கு சருமத்தில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று தான் முகப்பரு. இதனை சரிசெய்வதற்கு காபி தூளைப் பயன்படுத்தலாம். இதில் உள்ள இயற்கையான எக்ஸ்ஃபோலியன்ட் சருமத்தில் ஏற்படும் பாக்டீரியாக்களை எதிர்த்துப்போராட உதவுகிறது. எனவே முகப்பரு பிரச்சனையை சரி செய்வதற்கு 3 டீஸ்பூன் காபி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உளுந்து மாவு பேஸ்ட் அல்லது 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல், 3 தேக்கரண்டி தேன் மற்றும் சில துளிகள் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டை உருவாக்கி முகத்தில் தடவி வேண்டும். பின்னர் 10 முதல் 15 நிமிடங்களுக்குப்பிறகு கழுவும் போது முகம் பிரகாசமாக மாறும்.

வறண்ட சருமம், பிக்மென்டேஷன், தோல் அழற்சி, போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு காபி தூளைப் பயன்படுத்தலாம். எவ்வித சரும பாதிப்பும் இல்லாமல் முகத்தைப் பளபளப்பாக்குவதற்கு உதவுகிறது.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Beauty Tips, Coffee, Skincare