• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இயற்கையான முறையில் வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம்...எப்படி தெரியுமா..?

இயற்கையான முறையில் வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம்...எப்படி தெரியுமா..?

கண் மை

கண் மை

வீட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத காஜல் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் இது கண்களில் உள்ள தூசி, மாசுக்களை நீக்க உதவுகிறது.

  • Share this:
காஜல் பயன்படுத்துவது பெரும்பாலான பெண்களுக்கு விருப்பமான ஒன்றாகும். தற்காலம் மட்டுமில்லாமல் காலங்காலமாக அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் அழகுசாதனப் பொருள்களுள் ஒன்று காஜல். பொதுவாக, மார்க்கெட்டில் கிடைக்கும் வெவ்வேறு வகையான பிராண்ட் காஜலில் பல ரசாயனங்கள் சேர்கப்படுகிறது. இவை கண்களுக்கு தீங்கு விளைவிக்கிறது.

இதனால் இரவில் தூங்குவதற்கு முன்பு காஜலை சரியாக அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். மேலும் இதுபோன்ற தீங்கு விளைவிக்க கூடிய விஷயங்களை தவிர்க்க முற்றிலும் பாதுகாப்பான, பாரம்பரிய ஆயுர்வேத காஜலை வீட்டிலேயே தயார் செய்து பயன்படுத்தலாம்.

வீட்டில் தயாரிக்கப்படும் ஆயுர்வேத காஜல் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் இது கண்களில் உள்ள தூசி, மாசுக்களை நீக்க உதவுகிறது. இந்த காஜலை கண்களில் பூசி இரவில் தூங்கினால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்பட்டு நல்ல தூக்கம் வரும் எனவும் கூறப்படுகிறது. இது தவிர, வீட்டில் தயாரிக்கப்படும் காஜல் கண்களை மிக அழகாகவும் காட்டும்.

பாரம்பரிய ஆயுர்வேத காஜலை வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்...

உலர் ஆம்லா, ஆமணக்கு எண்ணெய் மற்றும் பாதாம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில், காஜலின் கருப்பு நிறத்தை உருவாக்க, இரண்டு கிண்ணங்களை எடுத்து, சிறிது இடைவெளியுடன் தரையில் குப்புற வைக்க வேண்டும். இப்போது கிண்ணங்களின் மேல் ஒரு தட்டை வைத்து அதற்கு கீழே விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். விளக்கானது தட்டை தொடுமாறு வைக்க வேண்டும்.



சுமார் 20-25 நிமிடங்களுக்குப் பிறகு, மெதுவாக தட்டை எடுத்தால், அதில் கருப்பு நிற தூள் படிந்து இருப்பதைக் காணலாம். அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். இதனை தொடர்ந்து உலர் ஆம்லா, பாதாம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து, இந்த பொடியுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய்யை சேர்க்க வேண்டும். இப்போது ஏற்கனவே சேமித்து வைத்திருந்த கருப்பு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அவற்றை ஒரு கரண்டி வைத்து சுரண்டி எடுத்து தனியாக வைக்கவும். இதனை ஒரு குப்பியில் சேகரித்து வைத்து பயன்படுத்தலாம்.

ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதால்தான் முடி கொட்டுகிறதா? உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

இதில் ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நெய் பயன்படுத்தலாம். மேலும் பாதாமையும் சற்று நெருப்பில் காட்டி அதனை பொடியாக தயாரித்தும் பயன்படுத்துவது நல்ல பலன் தரும். இந்த காஜலை குழந்தைகளுக்கு கூட பயன்படுத்தலாம், எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த காஜலை தினமும் பயன்படுத்துவதால் கண்கள் புத்துணர்ச்சியாக இருக்கும். நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணலாமே!.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: