சமீபத்தில் வீ.ஜே தீபிகா பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்திலிருந்து விலகியது சர்ச்சையானது. தனக்கு முகப்பருக்கள் இருந்த காரணத்தால்தான் நீக்கப்பட்டேன் என அவரே பல நேர்காணல்களில் கூறியிருந்தார். தான் என்னதான் சிறப்பாக நடித்திருந்தாலும் என் முகத்தில் தோன்றிய பருக்கள் அவர்களுக்கு குறையாக இருந்தது என்று மிகவும் மனமுடைந்து போனார்.
அதற்காக தான் சிகிச்சையில் இருப்பதாகவும் அப்போது கூறியிருந்தார். ஆனால் இப்போது அந்த பருக்களெல்லாம் களைந்து மிளிரும் முகத்துடன் இன்ஸ்டாகிராமில் வலம் வருகிறார் வீ.ஜே தீபிகா. இதற்காக அவரின் மெனக்கெடல்கள் என்னென்ன என்பதைக் காணலாம்.
வீ.ஜே தீபிகாவிற்கு பிசிஓடி பிரச்சனை இருப்பதாக நேர்காணல்களில் கூறியிருந்தார். அதனால் ஏற்பட்ட ஹார்மோன் சமநிலையின்மை காரணமாகவும் அவருக்கு முகத்தில் பருக்கள் அதிகரித்தன. அதோடு அவருக்கு எண்ணெய் சருமம் என்பதால் பருக்கள் அதிகரிக்க இது தூண்டுகோலாக அமைந்தது. எனவே அவற்றை சரி செய்ய அவருக்கு கடுமையான முயற்சிகள் தேவைப்பட்டன.
பிசிஓடி இருந்தாலே திடீரென பருக்கள் அதிகரித்து பின் மெல்ல மெல்ல குறையும். அவை வலி மிகுந்ததாக இருக்கும். இதை தீபிகாவும் கூறியுள்ளார். ”வலியை தாங்கிக்கொள்ளவே முடியாது. மருத்துவரும் பருக்கள் உச்சகட்டத்தை அடைந்துதான் குறையும் என்று கூறினார். மன அழுத்தத்துடனும் இருக்கக் கூடாது என்று கூறினார்கள். இல்லையெனில் அது பருக்களை இன்னும் அதிகரிக்கச் செய்யும் “ என தீபிகா கூறியிருந்தார்.
பின் சரும நிபுணர்கள் செய்த சிகிச்சைகளுக்குப் பின் அவர் பரிந்துரைத்த கிரீம்கள் மற்றும் ஜெல்களை தவிர வேறு எதுவும் அவர் பயன்படுத்தவில்லை. அதோடு சிகிச்சைக்காக கொடுக்கப்பட்ட மாத்திரைகள், சப்ளிமெண்டுகளையும் தவறாமல் எடுத்துக்கொண்டுள்ளார்.
அவருக்கு ஆயில் ஸ்கின் என்பதால் எண்ணெய் சுரப்பை தடுக்கும் சிகிச்சை முதலில் தரப்பட்டுள்ளது. பின் பருக்கள் வளர்வது தடுக்கப்பட்டதும் அந்த தழும்புகளை மறைக்கும் சிகிச்சை , ஸ்கின் பீலிங் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின் இறந்த செல்களை நீக்கி சருமத்தை தெளிவடையச் செய்யும் சிகிச்சை முறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
பிராய்லர் கோழிகளின் ஆபத்து... புற்றுநோய்க்கு வழி வகுக்குமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!
இந்த சிகிச்சைகளுக்குப் பின் உடலை நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொண்டுள்ளார். சூட்டை கிளப்பும் உணவுகளை தவிர்த்து குளுர்ச்சியாக உடலை வைத்துக்கொள்ளும் உணவுகளை பின்பற்றியுள்ளார் தீபிகா.
அப்படி அவர் ஹோட்டல் உணவுகளை தவிர்த்துள்ளார். பிராய்லர் சிக்கன்களை தவிர்த்து நாட்டு கோழிகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார்.
வெந்தையத்தை இரவு தண்ணீரில் ஊற வைத்து அதை மறுநாள் குடித்து வந்துள்ளார். இதனால் உடல் குளுர்ச்சியை தக்க வைத்துள்ளார். அரிசி உணவுகளை தவிர்த்துவிட்டு சிறுதானிய உணவுகளை அதிகமாக உட்கொண்டுள்ளார். கிழங்கு வகைகள், முட்டை மஞ்சள் கரு போன்றவற்றையும் தவிர்த்துள்ளார். பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள், சர்க்கரையை தவிர்த்துள்ளார்.
பெண்கள் இரவு தூங்கும்போது பிரா அணிவது ஆபத்தை உண்டாக்குமா..?ஆதாரங்கள் கூறும் உண்மை..!
தினமும் கீரை வகைகள், காய்கறிகள், பழ வகைகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இளநீர் அருந்துதல், தினமும் 4 லிட்டர் தண்ணீர் அருந்துதல் என சிகிச்சையின் போது இந்த டயட் முறைகளைதான் தீபிகா பின்பற்றியுள்ளார்.
குறிப்பாக தூக்க முறையை சரியாக பின்பற்றியுள்ளார். இதனால் மன அழுத்தமின்றி இருக்கும். அதோடு இரவு தூக்கத்தின்போதுதான் சருமம் நச்சுக்களை வெளியேற்றி பழுது நீக்க வேலைகளை செய்யும் என்பதால் இரவு 8 மணி நேர தூக்கம் அவசியம். இப்படித்தான் தன் முகத்தில் இருந்த பருக்களை குறைந்துள்ளார் வி.ஜே தீபிகா.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.