ஹேர் சீரம் பயன்படுத்துவோர் பெரும்பாலானோரின் புலம்பல் இதுதான்..! அதற்கு தீர்வு என்ன தெரியுமா?

முதல் முறை பயன்பாட்டாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..!

news18
Updated: August 17, 2019, 4:55 PM IST
ஹேர் சீரம் பயன்படுத்துவோர் பெரும்பாலானோரின் புலம்பல் இதுதான்..! அதற்கு தீர்வு என்ன தெரியுமா?
ஹேர் சீரம்
news18
Updated: August 17, 2019, 4:55 PM IST
முடியை பராமரிக்க நேரமில்லாத பலருக்கும் ஹேர் சீரம்தான் கை கொடுக்கிறது. முடியை ஸ்டைல் செய்து கொள்ளவும், ஷைனியான ஸ்மூத்தான தோற்றத்தையும் இந்த சீரம் அளிக்கிறது. இருப்பினும் சிலர் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இதனால்தான் முடி கொட்டுகிறது என்ற தீர்மானத்திற்கு வந்துவிடுகின்றனர். எனவே ஹேர் சீரம் எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் கூடாது என்பதை பார்க்கலாம்.

ஹேர் சீரம் தேர்வு செய்வதற்கு முன் உங்கள் முடியின் தன்மைக் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். பின் அதற்கு ஏற்ற சீரம் தேர்வு செய்வது சிறப்பு. உதாரனத்திற்கு, முடி சிலருக்கு என்னதான் வாரினாலும் கலைந்த தோற்றத்தையே அளிக்கும். அவர்கள் கண்ட்ரோல் ஃப்ரீக் என்கிற தன்மைக் கொண்ட சீரம் வாங்குவது நல்லது. இதனால் அவர்கள் கலைந்த தோற்றம் கொண்ட முடியிலிருந்து விடுபடலாம். ஈரத் தன்மையையும் கட்டுப்படுத்தும்.
சிலர் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தில் அதிக அளவிலான சீரத்தை அப்ளை செய்வார்கள். அது முற்றிலும் தவறு. குறைந்த அளவிலான சீரம் பெரிய அளவிலான முடிக்கும் போதுமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதாவது, உங்கள் முடி மிகவும் நீளமான அடர்த்தியான முடியாக இருக்கும் பட்சத்தில் ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிலான சீரம் போதுமானது.

அடுத்ததாக சிலர் சீரத்தின் பின்குறிப்பை பார்க்காமலேயே வாங்கி தடவிவிடுவார்கள். பிறகு முடி கொட்டுகிறது என புலம்புவார்கள். சில சீரம் தலைக்குக் குளித்த ஈரப்பதத்திலேயே தடவுவது அல்லது தலையை காய வைத்தபின் தடவுவது என இரு வகைகளில் கிடைக்கின்றன. எனவே அதன் பின்புறமுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயன்படுத்துங்கள். கண்டிஷ்னர் பயன்படுத்தினாலும் சீரம் அப்ளை செய்யலாம். குறைவான அளவு அவசியம்.

பலரும் செய்யும் தவறு,  சீரத்தை வேர் பகுதியில் அப்ளே செய்வது. அப்படி செய்து கொண்டிருந்தால் உங்கள் முடி உதிர்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சீரம் வேர் பகுதியில் விரிசலை உண்டாகும். சீரத்தை முடியின் நடுப் பகுதியிலிருந்து தடவ வேண்டும். இல்லையெனில் முடியை முற்றிலும் முன் புறம் விரித்துத் தடவுங்கள். குறிப்பாக முடியின் முனைப்பகுதியில் சீரத்தை சீராக தடவுவதால் வெடிப்புகளை தவிர்க்கலாம்.

Loading...ஹேர் சீரம் உங்கள் முடியின் ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்ளும் தன்மைக் கொண்டது. தேவைப்படும் போது குறைந்த அளவிலான சீரத்தை பயன்படுத்தலாம். அதிகமாக பயன்படுத்தினால் முடி பொலிவிழந்து போய்விடும். பொடுகுகள் உண்டாவதற்கான வாய்ப்பும் உள்ளது.

முடிந்தால் ஹேர் சீரம் தடவிய நாள்; இரவு தூங்கும் முன் தலைக்குக் குளித்துவிடுவது நல்லது. அப்படியே விடுவது முடி பாதிப்படைந்து வெடிப்புகள் உண்டாகும். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம். அதுவும் இல்லையென்றால் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமேனும் பயன்படுத்தலாம்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...