முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சருமத்தை பராமரிக்க விட்டமின் சி மற்றும் ரெட்டினோல் சீரம் பயன்படுத்துறீங்களா.? உங்களுக்காக சில டிப்ஸ்

சருமத்தை பராமரிக்க விட்டமின் சி மற்றும் ரெட்டினோல் சீரம் பயன்படுத்துறீங்களா.? உங்களுக்காக சில டிப்ஸ்

skincare Tips

skincare Tips

முதுமையின் அறிகுறிகளை குறைக்கும் ரெட்டினோல் மற்றும் வைட்டமின் சி உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்கும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சரும பராமரிப்புக்களை தேர்வு செய்யும் போது, அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், சிறிய தவறு கூட நமது சரும ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். எனவே, அதை எப்படி பயன்படுத்துவது?... அதன் நன்மை என்ன? என்பதை தெரிந்து வைக்க வேண்டும்.

முதுமையின் அறிகுறிகளை குறைக்கும் ரெட்டினோல் மற்றும் வைட்டமின் சி உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை வழங்கும். முகப்பரு பிரச்சனைகளை சரிசெய்யும் குணம் Retinol-க்கு உள்ளது. இது செல்களின் வளர்ச்சியை தூண்டும், வீக்கத்தைக் குறைக்கும், எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி முகப்பரு இல்லாத சருமத்தை பராமரிக்க தேவையான அனைத்து செயல்களையும் செய்யும்.

வைட்டமின் சி ஒரு வலுவான ஆக்ஸிஜனேற்றியாகும். இது தோல் சேதத்தை சரிசெய்ய உதவுகிறது மற்றும் வயதான தோற்றத்தை குறைக்க உதவும். மாசுபாடு, UV கதிர்வீச்சு ஆகியவற்றால் ஏற்படும் சேதத்தை தடுக்கிறது. உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் ரெட்டினோல் மற்றும் வைட்டமின் சி இரண்டும் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுவதை இங்கே காணலாம்.

சரியான இடைவெளியில் பயன்படுத்தவும்: 

ரெட்டினோல் இரவு நேரங்களில் பயன்படுத்தினால் சிறந்த பலனை கொடுக்கும். அதே போல, வைட்டமின் சி-யை காலை நேரத்தில் பயன்படுத்த வேண்டும். காலை நேரத்தில் உங்கள் சருமத்தை சுத்தம் செய்த பின்னர் வைட்டமின் சி சீரத்தை தடவவும். அதன் பிறகு, உங்கள் சருமதத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரை தடவவும். பின்னர் 30 அல்லது அதற்கு மேற்பட்ட SPF அளவை கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தவும். உங்கள் சருமம் வறட்சியாக காணப்பட்டால், மாலையில் ஹைலூரோனிக் அமில சீரம் அல்லது மாய்ஸ்சரைசரைக் கொண்டு ரெட்டினோலுக்கு மேல் போடலாம்.

இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடாது:

இரவு நேரத்தில் தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்த விரும்பினால், வைட்டமின் சி மற்றும் ரெட்டினோலை பயன்படுத்தலாம். வைட்டமின் சி காலையில் சிறப்பாகச் செயல்பட்டாலும் மாலையில் சரும வறட்சியை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். ஆனால், இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவது விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு நாள் வைட்டமின் சி பயன்படுத்தினால் மற்றொரு நாள் ரெட்டினோலை பயன்படுத்தவும்.

சன்ஸ்கிரீன் கொண்ட மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துதல்:

சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களில் ஒன்றான வைட்டமின் சி மற்றும் ரெட்டினோல் ஆகியவற்றுடன் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தை பாதுகாக்கும். இந்த இரண்டையும் மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனுடன் இணைந்து பயன்படுத்துவது, ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு வெளிப்பாட்டைத் தடுப்பதற்கும், நாள் முழுவதும் சருமத்தின் நீரேற்றத்தை பராமரிப்பதற்கும் உதவும்.

First published:

Tags: Beauty Tips, Skin Care