ஆரஞ்சு பழத்தோலை இரண்டாக மடித்து, அடுத்தவர் கண்களுக்கு நேரே வைத்து பிதுக்கினால், அதன் சாறு அவர்களது கண்களில் தெரித்து சிறிது நேரம் எரிச்சல் ஏற்படும். சின்ன வயதில் இந்த விளையாட்டை விளையாடாத நபர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது. நறுமணமும், அதனுடன் புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையும் கொண்ட ஆரஞ்சு பழங்களை விரும்பி சாப்பிடும் நாம், அதன் தோல்களில் உள்ள மகிமை குறித்து பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குப்பை என நினைத்து தூக்கி போடும் ஆரஞ்சு பழத்தோலை முறையாக பயன்படுத்தினால் உங்கள் சருமத்தின் அழகை மேம்படுத்தலாம்.
முதலில் ஆரஞ்சு பழ தோலில் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்
தோள்களை சுத்தப்படுத்தும்
ஆரஞ்சு பழத் தோலில் அழற்சிக்கு எதிரான பண்புகள் நிறையவே உள்ளன. இதனால், முகத்தில் உள்ள அழற்சிகள் நீங்கி சுத்தமான தோல் பகுதி உருவாகிறது.
இறந்த செல்களை வெளியேற்றும்
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தில் உள்ள நுண்துளைகள் மூலமாக உள்நுழைந்து இறந்த செல்களை வெளியேற்றுவதில் ஆரஞ்சு பழத் தோலின் பங்கு மிகப் பெரியது.
பளபளப்பு கூடும்
ஆரஞ்சு பழத் தோலில் சிட்ரிக் அமிலம் ஏராளமாக உள்ளது. இதனால் முகத்தில் உள்ள தழும்புகள் மற்றும் சுவடுகள் மறந்து உங்கள் சருமம் பளபளப்பாகவும், பிரகாசமாகவும் மாறும்.
நகங்களை கஷ்டப்பட்டு வளர்த்தும் உடைந்து போகுதா..? இந்த நெயில் மாஸ்க் அப்ளை பண்ணி பாருங்க...
வயது முதிர்ச்சியை தடுக்கும்
நமக்கு வயது ஏற, ஏற முகத்தில் வரும் சுருக்கங்கள் அதை காட்டிக் கொடுக்கும். ஆனால், அந்த சுருக்கங்களை நீக்கி நம்மை என்றும் இளமையாக வைத்திருக்க உதவுவது ஆரஞ்சு பழத்தோல் ஆகும்.
முகப்பருவை நீக்கும்
ஆரஞ்சு பழத் தோலில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்திகள் நிறைந்துள்ளதன் காரணமாக பருக்கள் மீது இதை பூசும்போது, அவற்றை காயவைத்து வெகு விரைவில் உதிர்ந்து போக செய்கிறது.
ஆரஞ்சு தோலை சருமத்திற்கு பயன்படுத்துவது எப்படி
* ஆரஞ்சு பழத் தோல்களை சேகரித்து நிழலில் உலர்த்த வேண்டும்.
* உலர்த்திய தோல்களை மிக்ஸியில் அரைத்து தூளாக்கி கொள்ளலாம். மிளகாய், மல்லி போன்ற மசாலா அரைத்த மிக்ஸி ஜார்களை பயன்படுத்தினால் உங்கள் முகத்தில் எரிச்சல் ஏற்படக்கூடும். ஆகவே இதற்கு தனி ஜார் பயன்படுத்தவும்.
* அரைத்த ஆரஞ்சு பவுடரை பிரிட்ஜில் ஒரு மாதம் வரையிலும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
* தேவைப்படும் சமயத்தில் ஒரு டீஸ்பூன் ஆரஞ்சு பவுடர் எடுத்து, அதனுடன் பச்சை பால் சேர்த்து கலக்கவும்.
* சிறந்த ஆன்டிஆக்சிடன்ட் பண்புகளை கொண்ட மஞ்சள் சிறிது சேர்த்து கலக்கவும்.
* இந்த கலவையை உங்கள் முகத்தில் பூசி மெதுவாக மசாஜ் செய்துவிடவும்.
* 10 முதல் 15 நிமிடங்கள் வரை உலர்த்திய பிறகு, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.