Home /News /lifestyle /

முல்தானி மெட்டியுடன் இந்த பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் உங்கள் முகம் பொலிவு பெறும்..!

முல்தானி மெட்டியுடன் இந்த பொருட்களை சேர்த்து பயன்படுத்தினால் உங்கள் முகம் பொலிவு பெறும்..!

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி உங்கள் முகத்தில் உள்ள கூடுதல் எண்ணெய் பசையை உறிஞ்சி விடும். இது மட்டுமல்லாமல் சருமத்தில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும்.

உங்கள் முகம் பொழிவு பெற வீட்டிலேயே சில சிகிச்சை முறைகளை கையாள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அதற்கு சிறந்த தேர்வாக முல்தானி மெட்டி இருக்கும். இது முகத்தில் புத்துணர்ச்சியான சருமம் கிடைக்க உதவியாக இருக்கும். அதே சமயம், முல்தானி மெட்டியுடன் மேலும் சில பொருட்களை கூடுதலாக சேர்த்து பயன்படுத்தினால், அதன் மூலமாக முகம் தெளிவாகவும், பளபளப்பாகவும் மாறும்.

எண்ணெய் பசை சருமத்திற்கு...

முல்தானி மெட்டி உங்கள் முகத்தில் உள்ள கூடுதல் எண்ணெய் பசையை உறிஞ்சி விடும். இது மட்டுமல்லாமல் சருமத்தில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கும். இதனால், சருமம் ஆரோக்கியமானதாக இருக்கும். இதனுடன் விட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொண்ட எலுமிச்சை சாறு சேர்த்து பயன்படுத்தினால் மிகவும் மிருதுவான சருமம் கிடைக்கும். சருமத்தில் எரிச்சல் குறையும்.

பயன்படுத்தும் முறை

* ஒரு டேபிஸ் ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடருடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
* இந்தக் கலவையை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்களுக்கு காய விடவும்.
* குளிர்ந்த தண்ணீர் விட்டு கழுவதும். இதை வாரத்தில் 2 முறை முயற்சி செய்யலாம்.



வேம்பு பவுடரை சேர்க்கலாம் :

ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகளைக் கொண்ட வேம்பு பவுடரை சேர்த்து பயன்படுத்துவதால் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகள் போன்றவை மறையும்.

பயன்பாடு முறை :

ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வேம்பு பவுடர் ஆகியவற்றை மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டிராப் வினிகர் ஆகியவற்றை சேர்க்கவும் இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி காய விட்டு, பின்னர் கழுவவும். வாரத்தில் ஒரு நாள் இதை நீங்கள் முயற்சி செய்யலாம்.

ஸ்லீவ்லெஸ் ஆடைகள் அணியும்போது அக்குள் கருமை சங்கடத்தை உண்டாக்குகிறதா..? உடனே போக்கும் வீட்டுக்குறிப்புகள்..!

பொலிவான சருமத்திற்கு நெல்லிக்காய் பொடி சேர்க்கலாம் :

நல்ல கூலிங் தன்மை கொண்ட முல்தானி மெட்டியுடன், நெல்லிக்காய் பொடி சேர்த்து ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். உங்கள் சருமத்தை மிருதுவாக மாற்றும்.

பயன்பாடு முறை

ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து, அதனுடன் பப்பாளி அல்லது ஸ்ட்ராபெர்ரி பழம் சேர்த்து கலக்கவும். இதை கழுத்து, முகத்தில் தடவி பின்னர் கழுவவும். இதை வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.



இளநீர் சேர்த்து பயன்படுத்தலாம் :

இளநீர் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து பயன்படுத்தினால் முகத்துக்கு தேவையான நீர்ச்சத்து கிடைக்கும். முகம் பளபளப்பாக மாறும்.

ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 2 ஸ்பூன் இளநீர் சேர்க்கவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும். குளுமையான தண்ணீர் வைத்து கழுவவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Face mask, Multani mitti

அடுத்த செய்தி