ஆண்கள் சரும அழகைப் பராமரிக்க வாரம் இரு முறையேனும் முட்டையைப் பயன்படுத்தி இந்த அழகுக் குறிப்புகளை செய்து வர வசீகரிக்கும் அழகைப் பெறலாம்.
முட்டை வெள்ளை பகுதி : முட்டையின் வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்து பருத்தி துணியில் நனைத்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 10-15 நிமிடங்கள் கழித்து முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவிவிடுங்கள். இது சருமத்தை இறுக்கமாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் பொலிவான சருமம் கிடைக்கும்.
வறண்ட சருமத்திற்காக : முட்டை வெள்ளைப் பகுதியை ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன் என எடுத்துக்கொண்டு நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் வறண்ட சருமத்திற்கு வழவழப்புத் தன்மை கிடைக்கும்.
எண்ணெய் வடிவதை தடுக்க : முல்தானி மெட்டியுடன் முட்டை வெள்ளையை எடுத்து நன்குக் கலந்துக் கொள்ளுங்கள். முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். எண்னெய் வடிவதை தடுப்பதோடு அதுதொடர்பாக வரும் மற்ற பிரச்னைகளையும் சரிசெய்ய உதவும்.
Published by:Sivaranjani E
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.