Home /News /lifestyle /

ஆண்கள் தலைமுடியைப் பராமரிக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

ஆண்கள் தலைமுடியைப் பராமரிக்க இந்த ஒரு பொருள் இருந்தால் போதும்..!

மாதிரி படம்

மாதிரி படம்

வேலைக்காக அதிகமாக வெளியில்  சுற்றிவரும் ஆண்களின் தலையில் தூசி, அழுக்கு அதிகம் சேர்ந்துகொள்ளும். இதை ஒழிக்க ஆண்கள் முறையான தலைமுடி பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் முடி உதிர்வு, பொடுகு, வழுக்கை போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.

மேலும் படிக்கவும் ...
    தலைமுடியை சிறந்த முறையில் பராமரிப்பதற்கானத் தீர்வு முட்டையில் உள்ளது. ஆம்... முட்டையில் உள்ள ஊட்டச்சத்து தலைமுடி வேர்களுக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். அழுக்குகளும் அடியோடி வெளியேறிவிடும். எனவே முட்டையை வைத்து எப்படியெல்லாம் தலைமுடியைப் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

    முட்டை மற்றும் கற்றாழை : முட்டை மஞ்சள் கரு 2 - 3 எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கற்றாழை 4 ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். மூன்றையும் நன்கு கலக்கி அதை தலைமுடி வேர்களில் படும்படி தேய்த்து 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் குளித்துவிடுங்கள்.

    முட்டை மற்றும் வாழைப்பழம் : ஒரு முட்டை, வாழைப்பழம் 3 ஸ்பூன் தேன் என அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்குக் கலக்கி அதை தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளியுங்கள்.



    முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் : 3 - 4 முட்டை வெள்ளை கரு மற்றும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் என எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாகக் கலந்துகொண்டு வேர்களில் படும்படி தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவுங்கள்.

    முட்டை மற்றும் தயிர் : 1 முட்டை மற்றும் 4 ஸ்பூன் தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு பிழிந்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை தலைமுடி வேர்களில் தடவி 1 மணி நேரம் கழித்து ஷாம்பூ கொண்டு குளித்துவிடுங்கள்.

    ஆன்லைனில் டேட்டிங் செய்யும் இளசுகளே...! இந்த விஷயங்களில் கோட்டை விட்டுவிடாதீர்கள்

    முட்டை மற்றும் விளக்கெண்ணெய் : 2 முட்டை மற்றும் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். பின் அதை தலையில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து தலைக்குக் குளித்துவிடுங்கள்.

    மேலே குறிப்பிட்டுள்ள இந்த குறிப்புகளில் ஏதேனும் ஒன்றை வாரம் ஒரு முறை செய்து வந்தாலே உங்கள் தலைமுடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube









    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    பார்க்க :

     

     

     
    Published by:Sivaranjani E
    First published:

    அடுத்த செய்தி