ஹோம் /நியூஸ் /lifestyle /

பளபளப்பான மற்றும் நீண்ட கூந்தலுக்கு கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!

பளபளப்பான மற்றும் நீண்ட கூந்தலுக்கு கறிவேப்பிலையை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!

தலைமுடி

தலைமுடி

30 வயதிற்குள்ளாகவே பலருக்கும் தலைமுடி முதல் தாடி வரை வெள்ளையாவது பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஒருவர் தங்களை பிறர் மதிக்காவிட்டால் கறிவேப்பிலையை போல தூக்கி எறிந்து விட்டார்கள் என்று வருத்தப்பட்டு சொல்வதுண்டு. ஆனால், உண்மையில் கறிவேப்பிலையின் மகத்துவம் தெரிந்த யாரும் அதனை சாப்பாட்டில் இருந்து தனியே எடுத்து தூக்கி எறிய மாட்டார்கள்.

  தற்போதைய நவீன காலத்தில் இளவயதிலேயே பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாக இருக்கிறது நரை முடி. 30 வயதிற்குள்ளாகவே பலருக்கும் தலைமுடி முதல் தாடி வரை வெள்ளையாவது பெரும் சிக்கலாக உருவெடுத்து வருகிறது. இதனால் தோற்றத்தின் மீது கவலை கொள்ளும் பலரும் தங்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். இந்த பிரச்னையை இயற்கை முறையில் தீர்க்க உதவும் அற்புத மூலிகையாக இருக்கிறது நமது தினசரி பயன்பாட்டில் இருக்கும் கறிவேப்பிலை.

  கூந்தல் முன்கூட்டியே வெள்ளையாவதை தடுக்க உதவும் வைட்டமின் பி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், புரோட்டீன்ஸ் கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இயற்கையான கூந்தல் தொனியை தக்க வைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருப்பதால் முடி ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையை பயன்படுத்தி பளபளப்பான, நீண்ட மற்றும் பெரிய கூந்தலை பெற உதவும் வழிகள் இங்கே...

  முடி உதிர்வுக்கு வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை:

  வெங்காய சாற்றில் சல்ஃபர் அதிகம் காணப்படுகிறது. இது முடியின் மேற்புறத்தை வலுவாக்க உதவுகிறது. கறிவேப்பிலை சாறு கூந்தலை மிருதுவாக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. ஒரு ஜாடியில் இந்த 2 பொருட்களை கலந்து, ஒரு மஸ்லின் துணி மூலம் கரைசலை வடிகட்டவும். சிறிய காட்டன் பஞ்சை எடுத்து இந்த கலவையில் நனைத்து கூந்தல் வேர்களில் தடவவும். 30 நிமிடங்கள் காத்திருந்து பின் குளிர்ந்த நீரில் தலையை அலசவும். வெங்காய வாடை போக ஷாம்பூவை பயன்படுத்தலாம்.

  தயிர் & கறிவேப்பிலை மாஸ்க்:

  பளபளப்பான தலைமுடிக்கு ஒரு கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் ஒரு கப் தயிர் ஆகியவற்றை எடுத்து கொண்டு பிளெண்டரில் நன்கு கலக்கவும். பின்னர் இந்த பேஸ்ட்டை எடுத்து உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் தடவி சுமார் 40 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரில் தலையை அலசி விரும்பினால் ஷாம்பூ பயன்படுத்தலாம். முடிக்கு ஊட்டமளிப்பதை தவிர உச்சந்தலையில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பொடுகு ஆகியவற்றை போக்க தயிர் உதவுகிறது.

  தேங்காய் + கறிவேப்பிலை டானிக்:

  அடுப்பில் ஒரு கடாயை வைத்து குறைந்த ஃபிளேமில் சூடாக்கவும். அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெயை ஊற்றி இதனுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். கறிவேப்பிலையின் சாறு தேங்காய் எண்ணெயில் இறங்கும் வரை காத்திருக்கவும். பின் இந்த கலவை சிறிது நேரம் ஆற வைத்து வடிகட்டி ஹேர் ஆயில் டிஸ்பென்சர் பாட்டிலில் ஊற்றி கொள்ளவும். இந்த டானிக்கில் இருக்கும் வைட்டமின்ஸ் மற்றும் ஃபேட்டி ஆசிட்ஸ் தலைமுடியை பளபளவென்று ஆக்குகிறது

  கறிவேப்பிலை, நெல்லி மற்றும் வெந்தயம்:

  தலைமுடியின் நீளத்தை அதிகரிக்க விரும்புவோர் அரை கப் கறிவேப்பிலை, வெந்தய இலை மற்றும் ஒரு நெல்லிக்காய் (கொட்டையை நீக்கிய) உள்ளிட்டவற்றை எடுத்து கொள்ளுங்கள். எடுத்து கொண்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு பேஸ்ட் போல நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இந்த ஹேர் மாஸ்கை உச்சந்தலை முதல் முடியின் முடிவு வரை நன்றாக அப்ளை செய்து சுமார் அரைமணி நேரம் வரை ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Curry leaves, Hair care, Lifestyle