Home /News /lifestyle /

கண் இமைகள் அடர்த்தியாக வளர ஆமணக்கு எண்ணெய் : எப்படி பயன்படுத்துவது..?

கண் இமைகள் அடர்த்தியாக வளர ஆமணக்கு எண்ணெய் : எப்படி பயன்படுத்துவது..?

ஆமணக்கு எண்ணெய்

ஆமணக்கு எண்ணெய்

செயற்கை கண் இமைகளை வைப்பதை விட ஆமணக்கு எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இயற்கையான கண் இமைகளையே பெறலாம்.

  • News18
  • Last Updated :
    கண் இமைகள் அடர்த்தியாக இருக்க வேண்டும் என பலரும் செயற்கை முறையிலான ஐ லாஷஸ் பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக ஆமணக்கு எண்ணெய்யைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இயற்கையான கண் இமைகளையே பெறலாம். எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

    எப்படி செயல்படுகிறது? 

    ஆமணக்கு எண்ணெய் ஆண்டி ஃபங்கல் மற்றும் ஆண்டி பாக்டீரியாவைக் கொண்டுள்ளது. இதோடு கொழுப்பு அமிலம், புரோட்டின், மினரல், வைட்டமின் E , ஓமேகா -9 ஆகியவை இருக்கின்றன. இதனால் இயற்கையாகவே முடி வளர்ச்சியைத் தூண்டும் சக்தி ஆமணக்கு எண்ணெயில் இருக்கிறது.



    எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ?

    முகத்தில் எந்தவித மேக் அப் இல்லாமல் சுத்தமாக கழுவிக் கொள்ளுங்கள். குறிப்பாக கண்களைச் சுற்றிலும் எந்தவித மேக் அப் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

    கண்களை காட்டன் கொண்டு ரோஸ் வாட்டரில் முக்கி கண்களை துடைத்து எடுங்கள்.

    கொஞ்சம் ஆமணக்கு எண்ணெய்யை பயன்படுத்தி கண்களைச் சுற்றிலும் மசாஜ் செய்யுங்கள்.

    பின் நன்கு சுத்தம் செய்யப்பட்ட மஸ்காரா பிரஷ் - ஐ ஆமணக்கு எண்ணெயில் முக்கி மஸ்காரா அப்ளை செய்வது போல் கண்களுக்கு மேல் மற்றும் கீழ் இமைகள் இரண்டிலும் தடவவும். தடவும்போது கவனமாக பயன்படுத்தவும்.

    இப்படி தினமும் தூங்கும் முன் செய்யுங்கள். அப்போதுதான் இரவு முழுவதும் எண்ணெய் சருமத்தில் ஊறி நல்ல பலன் கிடைக்கும்.

    காலை எழுந்ததும் மீண்டும் காட்டனை ரோஸ் வாட்டரில் முக்கி துடைத்து எடுங்கள்.




    லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Published by:Sivaranjani E
    First published:

    Tags: Beauty Tips

    அடுத்த செய்தி