Home /News /lifestyle /

பீட்ரூட்டை பயன்படுத்தி உதடுகளை ஹைட்ரேட் செய்வது எப்படி..? 

பீட்ரூட்டை பயன்படுத்தி உதடுகளை ஹைட்ரேட் செய்வது எப்படி..? 

பீட்ரூட்

பீட்ரூட்

சருமத்தை பராமரிக்க பல ஃபேஸ் பேக்குகள் மற்றும் மாய்ஸ்சரைசர்களைப் போட்டாலும், உதடுகள் மீதும் கவனம் செலுத்தினால் மட்டுமே முழு அழகைப் பெற முடியும்.

பெண்கள் சரும பராமரிப்பு என்று வரும் போது ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை விட, வீட்டிலேயே கிடைக்க கூடிய எளிமையான பொருட்களையே மிகவும் நம்புகின்றனர். இதை பாட்டி முதல் அம்மாக்கள் வரை நம் வீட்டில் இருக்கும் பலரும் செய்து பார்த்திருப்போம். அப்படி பெண்களின் சரும பராமரிப்பில் முக்கியமான பொருட்களில் ஒன்றாக பீட்ரூட் உள்ளது.

உங்கள் சரும பராமரிப்பு பழக்கத்தில் பீட்ரூட்டை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்வது அவசியமானது. உங்கள் உதடுகளை மென்மையாகவும், இளஞ்சிவப்பு நிறமாகவும் மாற்றுவதில் பீட்ரூட் சிறப்பாக செயல்படக்கூடியது. சருமத்தை பராமரிக்க பல ஃபேஸ் பேக்குகள் மற்றும் மாய்ஸ்சரைசர்களைப் போட்டாலும், உதடுகள் மீதும் கவனம் செலுத்தினால் மட்டுமே முழு அழகைப் பெற முடியும். எனவே உதடுகளை அழகாகவும், மென்மையாகவும் வைக்க பீட்ரூட் எப்படி உதவுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி என்பது உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும் மற்றும் சீரான நிறத்தை கொடுக்கவும் உதவக்கூடிய ஒரு சிறப்பான மூலப்பொருள் ஆகும். உதடுகளில் உள்ள கருமை நிறத்தை போக்க பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உதவும். மேலும், பீட்ரூட்டின் இளஞ்சிவப்பு நிறம் உதடுகளும் அதே நிறத்தை பெற உதவுகிறது.

பீட்ரூட் உலர்ந்த மற்றும் வெடிப்புக்கள் நிறைந்த உதடுகளை சீரமைக்க உதவும், இயற்கையான மாய்ஸ்சுரைசர் ஆகும். இதனை தினந்தோறும் பயன்படுத்தி வந்தால், உங்கள் உதடுகள் மென்மையாக மாறும். பீட்ரூட்டில் உள்ள நீரேற்றம் செய்யும் பண்புகள் உதடுகளை மிகவும் மென்மையாக்க உதவுகிறது. மேலும் உதடுகளில் உள்ள வெடிப்புகள், கோடுகளை குறைத்து வயதான தோற்றத்தை எதிர்த்து போராடுகிறது.

பீட்ரூட் இதழ்களை நீரேற்றம் செய்யக்கூடியது. பீட்ரூட் சாறுகளை உதடுகள் மீது தடவி வந்தால், அது நீரேற்றமாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் காட்சியளிப்பதை நீங்கள் கண்கூடாக உணரலாம். பீட்ரூட்டின் நன்மைகளைப் பற்றி அறிந்து கொண்டீர்கள், இப்போது உங்கள் கனவு உதடுகளைப் பெற இந்த அற்புதமான காய்கறியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பார்க்கலாம்.



பீட்ரூட்டை உதடுகள் மீது பயன்படுத்தும் முறைகள்:

புதிதாக வாங்கிய பீட்ரூட்டை நன்றாக மசித்து, சர்க்கரை கலந்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த கலவையுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் கலந்து, தினந்தோறும் உதடுகள் மீது தேய்த்து வாருங்கள். இதன் மூலம் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, உதடுகள் மென்மையாகவும், பிரகாசமாகவும் மாறும்.

பீட்ரூட் ஒரு இயற்கையான லிப் பாம் ஆகும். கடையில் வாங்கப்படும் லிப் பாம்களில் நிறைய இரசாயனங்கள் உள்ளன, மேலும் அவை உதடுகளை கருமையாக்கும் அல்லது சேதப்படுத்தக்கூடும். எனவே வீட்டிலேயே பீட்ரூட் லிப் பாம் செய்து பயன்படுத்தலாம் அல்லது பீட்ரூட் துண்டுகளை இதழ்கள் மீது தேய்த்து வரலாம்.

சமந்தா கட்டியிருக்கும் இந்த சேலையின் விலை எவ்வளவு தெரியுமா..?

ஒரு துண்டு பீட்ரூட்டை 15 முதல் 20 நிமிடங்கள் வரை சேமித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அந்த பீட்ரூட் துண்டு நன்றாக குளிர்ச்சி அடைந்த பிறகு, அதனை வைத்து, உதடுகள் மீது தடவவும். இதனை சில நொடிகள் தேய்த்தாலே போதும். உதடுகள் இயற்கையான ரோஜா நிறத்திற்கு மாறுவதை காணலாம்.



பீட்ரூட் மூலம் பிரகாசமான உதடுகளைப் பெற, ஒரு டீஸ்பூன் பீட்ரூட் சாற்றை எடுத்து, சில துளிகள் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். இந்த கலவையை உதடுகள் மீது தேய்த்து வந்தால், அவை பிரகாசமடையும். ஏனெனில் பீட்ரூட் மற்றும் எலுமிச்சை இரண்டிலும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உதடுகளை பிரகாசமாக்க உதவும்.

ஒரு பீட்ரூட்டை நறுக்கி அதனை நன்றாக மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் பால் சேர்க்கவும். இப்போது உங்களுக்கான லிப் மாஸ்க் தயார். இதனை உதடுகள் மீது பூசி, 20 நிமிடங்கள் வரை காய விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் கழுவினால் உதடுகள் நன்றாக ஹைட்ரேட் செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Beetroot

அடுத்த செய்தி