முகத்தில் இறந்த செல்கள், அழகுக்கை நீக்கி அப்பழுக்கற்ற சருமத்தைப் பெற வாழைப்பழ ஸ்கிரம் எளிமையான வீட்டுக் குறிப்பு. இந்த ஸ்கிரப்பை வாரம் ஒரு முறை செய்ய முகம் தெளிவாக இருப்பதோடு ஈரப்பதம் கிடைக்கும். சருமமும் மென்மையடையும்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 1
தயிர் - 3 ஸ்பூன்
டார்க் சாக்லெட் - 2-3 சதுரம்
உப்பு - 1 ஸ்பூன்
செய்முறை :
வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள்.
டார்க் சாக்லெட்டை கின்னத்தில் போட்டு அடுப்பில் வைத்து சூடு படுத்தினால் உருகிவிடும்.
அதை மசித்த வாழைப்பழத்தில் சேர்த்து பிசையுங்கள். அடுத்ததாக தயிர் சேருங்கள்.
மூன்றையும் நன்றாகக் கலந்ததும் உப்பு சேர்த்து கலக்குங்கள்.
தற்போது முகத்தில் அப்ளை செய்து வட்டப்பாதையில் கைகளை வைத்து மசாஜ் செய்யுங்கள்.
இவ்வாறு 10 நிமிடங்கள் செய்யுங்கள். பின் 10 நிமிடங்களுக்கு கழுவாமல் முகத்தில் அப்படியே ஊற வையுங்கள்.
பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இறுதியாக குளிர்ந்த நீரில் பளிச்சென ஒருமுறை நீரைத் தெளியுங்கள்.
அடுத்ததாக மென்மையான துணியில் துடைத்துவிட்டு முகத்தில் ஈரப்பதம் இருக்க மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்.
இப்படி வாரம் ஒரு முறை செய்தாலே பிரகாச முகத்தோற்றத்தைப் பெறலாம். சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை இந்த வாழைப்பழம் ஸ்கிரப் தரும். இந்த வாழைப்பழம் மிக்ஸிங் மீதம் இருந்தால் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow
News18Tamil.com @
Facebook,
Twitter,
Instagram,
Sharechat,
Helo,
WhatsApp,
Telegram,
TikTok,
YouTube
பார்க்க :
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.