• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சனைகளை நீக்க உதவும் வாழைப்பழத் தோல் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?

முகப்பரு உள்ளிட்ட சரும பிரச்சனைகளை நீக்க உதவும் வாழைப்பழத் தோல் : எப்படி பயன்படுத்த வேண்டும்..?

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்

வாழைப்பழ தோலை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது என குறிப்பிட்டுள்ள அவர், வாழைப்பழத் தோலின் உட்புறத்தை

  • Share this:
சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள என்னதான் கீரிம்கள், பேஸ்வாஷ், லோஷன், சீரம் உள்ளிட்டவை இருந்தாலும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது தான் எவ்வித பக்க விளைவையும் ஏற்படுத்தாது என்பதை பெரும்பாலானோர் தற்போது உணர்ந்துள்ளனர். சமீபத்தில், பல பிரபலங்கள் சருமத்திற்கு இரசாயனங்கள் இல்லாத வீட்டில் இருக்கும் பொருட்களை பரிந்துரைத்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை பாக்யஸ்ரீ, முகப்பரு உள்ளிட்ட தோல் பிரச்சினைகள் ஏற்படாமல் சருமத்தை பாதுக்காக்க எளிய டிப்ஸ்களை ஷேர் செய்துள்ளார். சருமத்தை பொலிவாக வைத்திருக்க வாழைப்பழ தோல் போதுமானது என்று பாக்யஸ்ரீ பரிந்துரைத்துள்ளார். வாழைப்பழ தோலில் உள்ள சிலிக்கா, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதிலுள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.

மேலும் வாழைப்பழ தோலில் ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சருமத்தை பிரகாசமாக்குகிறது மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழ தோலை சருமத்தில் பயன்படுத்துவதால் இது ஒரு மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது மற்றும் சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வாழைப்பழத்தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இதனை தோல் தடிப்பு அழற்சியால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவதன் மூலம் நமைச்சலை போக்க முடியும் என்றும் அவர் விளக்கியுள்ளார்.

வாழைப்பழ தோலை சருமத்திற்கு எப்படி பயன்படுத்துவது என குறிப்பிட்டுள்ள அவர், வாழைப்பழத் தோலின் உட்புறத்தை (வெள்ளை பகுதி) உங்கள் முகத்தில் மெதுவாக தேய்க்கவும். சுமார் 15 நிமிடங்கள் தேய்த்து சிறிது நேரம் அப்படி விட்டு விடுங்கள். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும் என்று பாக்யஸ்ரீ கூறியுள்ளார்.



மேலும் சில பயன்படுத்தும் முறைகள் குறித்து இங்கு காண்போம்...

* முதலில் பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

இயற்கையான முறையில் வீட்டிலேயே காஜல் தயாரிக்கலாம்...எப்படி தெரியுமா..?

* பால், வாழை பழத்தோல் இரண்டையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வரலாம். தினமும் ஒரு முறை இதனை செய்து வந்தால் முகப்பரு பிரச்னை நீங்கி, சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்து கொள்ளலாம். மேலும் சரும வறட்சி நீங்கவும் உதவுகிறது.

* வாழைப் பழ தோலிலுள்ள நாரை எடுத்து அதனுடன் கற்றாழையின் ஜெல்லை கலந்து நன்றாக அரைத்து, இந்த கலவையை கண்களுக்கு அடியில் தேய்த்து 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்தால் கருவளையம் விரைவில் மறைந்துவிடும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: