கற்றாழை பழங்காலத்திலிருந்தே அதன் குணப்படுத்துதல் மற்றும் கிருமி நாசினி பண்புகளுக்கு பெயர் பெற்றது. இதன் முக்கியமான பயன்கள் குறித்து ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அலோவேராவில் துத்தநாகம் நிறைந்துள்ளதால், இது காயங்கள் மற்றும் தீக்காயங்களை குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. மேலும் கற்றாழை சக்திவாய்ந்த ஈரப்பதமூட்டும் பண்புகளைக் கொண்டுள்ளதால் சருமம் ஈரப்பதத்தை இழப்பதில் இருந்து தடுக்கிறது. இது உங்கள் சருமத்தை பிரகாசமாகவும் பளபளப்பாகவும் வைப்பதோடு இறந்த சரும செல்களை அகற்றவும், மென்மையாக்கவும் பயன்படுகிறது.
கற்றாழையின் குணப்படுத்தும் பண்புகள் :
கற்றாழை கோடைகாலத்தில் உங்களை சன்பர்னில் இருந்து பாதுகாக்க பயன்படுகிறது. இதனை எண்ணெய் சருமம் உடையவர்களும் பயன்படுத்தலாம். ஏனெனில் அதில் எந்த எண்ணெயும் இல்லை. நீங்கள் கற்றாழை செடியிலிருந்து சில புதிய ஜெல் அல்லது சாற்றை நேரடியாக ஸ்கூப் செய்து சருமத்தில் தடவலாம். இருப்பினும், கற்றாழை செடியிலிருந்து ஜெல்லைப் பயன்படுத்தும்போது மனதில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இலையை சரியாகக் கழுவ வேண்டும்.
கற்றாழை ஜெல் அல்லது சாற்றை உங்கள் தோலில் 20 நிமிடங்கள் தடவி சாதாரண தண்ணீரில் கழுவலாம். குறிப்பாக கோடைகாலத்தில் கற்றாழை பயன்படுத்துவது சருமத்தை மென்மையாக வைத்திருப்பதோடு, எண்ணெய் சருமமாக மாற்றாமல் ஈரப்பதமாக வைத்திருக்கும். மேலும், உலர்ந்த சரும நிலைகளை எதிர்த்துப் போராட உதவும், இயற்கையான பளபளப்பை மீட்டெடுக்க உதவும். இதுதவிர சக்திவாய்ந்த ஈரப்பதமூட்டும் பண்புகள் கற்றாழைக்கு உண்டு.
முகப்பரு பிரச்சனையை தீர்க்கும் கற்றாழை ஜெல்
அலோவேரா அதன் குணப்படுத்தும் பண்புகள் காரணமாக முகப்பருக்களை குறைக்க உதவுகிறது. முகப்பரு உள்ளவர்களின் சருமம், மேலோட்டமான வறட்சியால் பாதிக்கப்படுகிறது. கற்றாழை
முகப்பரு பாதிப்புக்குள்ளான சருமத்திற்கு உதவுகிறது. ஏனெனில் இது சருமத்தை எண்ணெய்யாக மாற்றாமல், வறட்சி மற்றும் ஈரப்பதத்தை நீக்குகிறது. கற்றாழை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இதனால் முகப்பரு மற்றும் பருக்களை குணப்படுத்தும் விளைவைக் கொண்டுள்ளது. இது சருமத்தை மென்மையாக்கி, வலியை நீக்குகிறது, ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது.
கண்களில் போடும் காஜல் நீண்ட நேரத்திற்கு அழியாமல் இருக்க சில டிப்ஸ்!
கற்றாழை ஜெல் சீரம்:
கற்றாழை செடியிலிருந்து வரும் சாற்றை சீரமாகவும் பயன்படுத்தலாம். உண்மையில், சீரம் பொதுவாக நீர் சார்ந்தவை. கற்றாழையிலும் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. இது வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் உட்செலுத்தப்படுவதால், இது சருமத்தை புத்துணர்ச்சியுற செய்து தோல் அமைப்பை மேம்படுத்துகிறது. கற்றாழை சீரத்தை வழக்கமாகப் பயன்படுத்துவதால், உங்கள் தோல் பிரகாசமாகவும், இளமையாகவும் இருக்கும். உங்கள் முகத்தை சுத்தம் செய்தவுடன் தினமும் கற்றாழை சாற்றை உங்கள் சருமத்தில் தடவலாம். அரை மணி நேரம் உலர வைத்து விட்டு நீரில் கழுவவும்.
கற்றாழை பேஸ்பேக்:
கற்றாழையை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தலாம். அத்தகைய ஒரு பேக்கை தயாரிக்க நீங்கள் 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 தேக்கரண்டி
ஆரஞ்சு பீல் பவுடர், தயிர், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேஸ்ட் போல உருவாக்கி உங்கள் சருமத்தில் தடவவும். 30 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் சிறிது நீரில் கழுவ வேண்டும்.
அது இல்லாமல், கற்றாழை,
முல்தானி மிட்டி கொண்டு மற்றொரு பேஸ் பேக்கை தயாரிக்கலாம். இந்த பேக்கை உருவாக்க நீங்கள் 1tsp கற்றாழை ஜெல்லுடன் 2 தேக்கரண்டி ரோஸ் வாட்டர் மற்றும் 3 தேக்கரண்டி மல்டானி மிட்டி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அவை அனைத்தையும் கலந்து பேஸ்ட் உருவாக்கி முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் காத்திருந்து பின்னர் அதனை நீரில் கழுவவும். இந்த பேக் சருமத்தை தெளிவுபடுத்துவதற்கும் பிரகாசப்படுத்துவதற்கும் உதவுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.