ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்யப்பட்ட சருமத்தை சரி செய்ய உதவும் டிப்ஸ்...

அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்யப்பட்ட சருமத்தை சரி செய்ய உதவும் டிப்ஸ்...

எக்ஸ்ஃபோலியேஷன்

எக்ஸ்ஃபோலியேஷன்

பொதுவாகவே கற்றாழை ஜெல் மிகவும் குளிர்ச்சி என்பதால் பாதிக்கப்பட்ட சருமத்தில் இதை தடவும் போது அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்ததால் சேதமடைந்த பகுதிகளில் இருக்கும் எரிச்சலை தணிக்கும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சரும பராமரிப்பில் எக்ஸ்ஃபோலியேட்டிற்கு (exfoliate) முக்கிய பங்கு உண்டு. எக்ஸ்ஃபோலியேட் செய்வது என்பது சருமத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்கள் வளர உதவுகிறது.சரும வெடிப்பு, முகப்பரு தழும்புகளை தடுப்பதுடன் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும் எக்ஸ்ஃபோலியேட் குறைக்கிறது.

அழகான சருமத்தை பெற விரும்புவோர் தங்கள் முகத்தை சீரான இடைவெளியில் எக்ஸ்ஃபோலியேட் செய்வதில் கவனம் செலுத்துகிறார்கள். பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி வீட்டிலேயே தங்கள் சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்து கொள்ளும் பலரும், சில நேரங்களில் ஆர்வ மிகுதியில் அடிக்கடி செய்கிறார்கள். இதனால் சருமம் மிகவும் சேதமடைகிறது.

அடிக்கடி எக்ஸ்ஃபோலியேட் செய்வதால் மட்டுமல்ல, சருமத்தை மிகவும் கடுமையாக எக்ஸ்ஃபோலியேட் செய்யும் கெமிக்கல்கள் அடங்கிய தயாரிப்புகளை அல்லது பொருட்களை பயன்படுத்துவதன் விளைவாகவும் சேதம் ஏற்படுகிறது. சரும பராமரிப்பில் அளவுக்கு அதிகமாக செய்யப்படும் எதுவும் சருமத்தின் இயற்கையான பாதுகாப்பை பாதிக்கிறது. எக்ஸ்ஃபோலியேட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. சரி, ஒருவேளை ஓவர்-எக்ஸ்ஃபோலியேட்டட் காரணமாக உங்கள் சருமம் எரிச்சல், சிவந்து போதல், முகப்பருக்கள்,எண்ணெய் சருமம், தோல் இறுக்கமடைவது மற்றும் தடிப்புகள் உள்ளிட்ட பல பாதிப்புகளை எதிர்கொண்டால் எப்படி சரி செய்வது.!

சரும சேதத்தை சரி செய்ய உதவும் 5 வழிகள்:

சருமத்திற்கு ஓவர்-எக்ஸ்ஃபோலியேஷன் செய்வது ஹைப்பர் பிக்மென்டேஷன் உள்ளிட்ட பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம். எனவே சேதத்தை சரி செய்ய குறைந்த pH பேலன்ஸ் கொண்ட லேசான, நுரை வராத க்ளென்சரை பயன்படுத்த வேண்டும். மேலும் ஹைலூரோனிக் ஆசிட், கற்றாழை, தோல் எரிச்சலை குறைக்கும் ஷியா பட்டர் உள்ளிட்டவை இருக்கும் க்ளென்சரை பயன்படுத்தலாம்.
ஓவர்-எக்ஸ்ஃபோலியேஷன் செய்துள்ளதன் காரணமாக சருமத்தில் எரிச்சல், வீக்கம், அரிப்பு ஏற்பட்டால் அதனை குணமாக்க நீங்கள் ஐஸ் க்யூப்ஸ்களை பயன்படுத்தலாம்.
நீங்கள் உங்கள் சருமத்தை அதிகமாக எக்ஸ்ஃபோலியேட் செய்திருந்தால், இறந்த சரும செல்களை மட்டுமல்ல புதிய செல்களையும் சேர்த்து அகற்றி இருப்பீர்கள். இந்த நிலையில் வைட்டமின் ஈ அடங்கிய ஆயிலை சருமத்தில் பயன்படுத்துவது பாதிக்கப்பட்ட பகுதியில் உணரப்படும் அசௌகரியத்தை குணமாக்குகிறது. அப்பகுதியை ஈரப்பதமாக வைக்க மற்றும் ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.
பொதுவாகவே கற்றாழை ஜெல் மிகவும் குளிர்ச்சி என்பதால் பாதிக்கப்பட்ட சருமத்தில் இதை தடவும் போது அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்ததால் சேதமடைந்த பகுதிகளில் இருக்கும் எரிச்சலை தணிக்கும். பல சரும பாதிப்புகளுக்கு சுகிகிச்சையாக இருக்கும் அலோவேரா ஜெல் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. தோல் எரிச்சல் மற்றும் சிவந்த சருமத்தை உடனடியாக குளிர்ச்சியாக்க உதவும்.
ஓவர்-எக்ஸ்ஃபோலியேஷன் காரணமாக ஏற்படும் சரும சேதத்தை குறைக்க மற்றொரு சிறந்த வழி தவறாமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த கொலாஜன், எலாஸ்டின் மற்றும் கெரட்டின் போன்ற தோல் புரதங்களை சன்ஸ்கிரீன் பாதுகாக்கிறது. அதிகமாக எக்ஸ்ஃபோலியேஷன் செய்துள்ளீர்கள் என்றால் நீங்கள் வெயிலில் செல்லும் போது சன்பர்ன் அல்லது ரேஷஸ் பிரச்னையை எதிர்கொள்ளலாம். இதிலிருந்து பாதுகாக்கிறது சன்ஸ்கிரீன்.
Published by:Josephine Aarthy
First published:

Tags: Skin allergy, Skin Disease, Skincare