வெயில் காலத்தில் சந்தனத்தின் மகிமையைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...!

வெயில் காலத்தில் சந்தனத்தின் மகிமையைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்...!
சந்தனத்தின் மகிமை
  • Share this:
தண்ணீரின் மகிமை வெயில் காலத்தில்தான் தெரியும் என்பார்கள். அதுபோல சந்தனத்தின் மகிமையும் வெயில் காலத்தில் தான் தெரியும். எவ்வாறு என்கிறீர்களா..? மேலும் படியுங்கள்.

பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்க : சந்தனம், மஞ்சள் மற்றும் கற்பூரம் மூன்றையும் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் காய விட்டு பின் முகத்தைக் கழுவுங்கள். அதேபோல் சந்தனத்தில் எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தாலும் முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கும்.

சருமம் மென்மையடைய : சந்தன எண்ணெய்யை இரவு தூங்கும் முன் முகத்தில் மசாஜ் செய்து அப்படியே தூங்கிவிடுங்கள். பின் காலையில் எழுந்து பார்க்கும்போது பொலிவான மற்றும் மென்மையான சருமத்தை உணர்வீர்கள்.


கருமை நீங்க : சந்தனம், வெள்ளரி சாறு, தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு உள்ளிட்ட பொருட்களை பேஸ்ட் பதத்தில் கலந்துகொள்ளுங்கள். அதை முகத்தில் மாஸ்க் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் காய விடுங்கள். இதனால் சூரிய ஒளியால் உண்டாகும் கருமை, கரும் புள்ளிகள் நீங்கும்.



கரும்புள்ளிகள் மறைய : சந்தனம் மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தூங்கிவிட காலை நல்ல பலன் தெரியும்.எண்ணெய் சருமம் கொண்டவர்களுக்காக : சந்தனத்தில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் காத்திருந்து குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் வடிவது குறையும்.

படிக்க :

ஊரடங்கு உத்தரவு : இந்த அழகுக் குறிப்புகளை செய்ய இதுவே சரியான வாய்ப்பு..!

 
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்