வீட்டிற்குள்ளேயே இருந்தாலும் சருமப் பராமரிப்பு அவசியம்.. ஏன் தெரியுமா ?

காட்சி படம்

வீட்டில் இருக்கும்போது சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம் தெரியுமா ?

  • Share this:
    வீட்டிற்குள்ளேயேதான் இருக்கிறேன் எனக்கு ஏன் பருக்கள், கரும்புள்ளிகள், சருமச்சிதைவுகள் வருகின்றன என கேள்வி எழுகிறது எனில் அதற்கு பதில் இருக்கிறது. வீட்டில் இருந்தாலும் நாம் சும்மா இருப்பதில்லை. டிவி பார்ப்பது, செல்ஃபோன், லாப்டாப் பார்ப்பது என இப்படியான திரைகளில் அதிக நேரம் செலவு செய்கிறோம் என்றாலும் முகப்பருக்கள், சருமச்சிதைவுகள் உண்டாகலாம். எனவே வீட்டில் இருக்கும்போது சருமத்தை பாதுகாக்க என்ன செய்யலாம்.

    சுகாதாரம் : கைகளை அடிக்கை சுத்தம் செய்வது, உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது, சுகாதாரத்தை பின்பற்றுவது போன்ற விஷயங்களை முறையாகப் பின்பற்றுங்கள். ஈரபதத்தை தக்க வைக்க தண்ணீர் குடியுங்கள். மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள். வறண்ட சருமமாக அப்படியே விடாதீர்கள்.

    குளியல் : வாசனைக்காக அதிக கெமிக்கல் அல்லது சருமத்திற்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் சோப்பு, பாடி வாஷ் பயன்படுத்துவதை தவிருங்கள். தரமான , ஆண்டி பாக்டீரியல் மூலக்கூறு கொண்ட பாடி வாஷ், ஹேண்ட் வாஷ் பயன்படுத்துங்கள்.

    Also Read : ஆரோக்கியமான சருமத்தை பெற இந்த 5 டிப்ஸ்களை பின்பற்றுங்கள்..

    அதிக சருமப் பராமரிப்பு : சருமத்தை பராமரிக்க அடிக்கடி எதையாவது முகத்தில் போட்டுக்கொண்டே இருப்பது, முகத்தை தேய்த்து தேய்த்து கழுவுவது, இதற்காக அடிக்கடி முகத்தை தொடுவது போன்ற விஷங்கள் சருமத்தை அதிகம் சேதப்படுத்தும். சருமத்தின் ஈரப்பதத்தை குறைக்கும் அதேசமயம் சருமத்திற்கு தேவையான எண்ணெய் பதமும் நீங்கிவிடும்.

    சானிடைசர் : முகத்தை தொடும் முன் கைகளை சுத்தமாக கழுவிவிட்டு தொடுங்கள். தூசு, அழக்கு படிந்த மேற்பரப்புகளை தொட்டுவிட்டு அப்படியே முகத்தில் கை வைத்தால் அந்த பாக்டீரியாக்கள் சருமத்தில் படிந்து சேதாரத்தை உண்டாக்கும். எனவே கைகளை கழுவிவிட்டு தொடுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: