ஆண்கள் சருமம் அதிக எண்ணெய் வடியக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமன்றி அவர்களின் சருமம் கடினமானதாக இருக்கும். எனவே பெண்கள் பயன்படுத்தும் அதே அழகு குறிப்புகள் சில ஆண்களுக்கு ஒத்துவராது. கிச்சனில் இருக்கும் பொருட்களை வைத்து சருமத்தைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
வெள்ளை சன்னா, மஞ்சள் : வெள்ளை சன்னாவை இரவு ஊற வைத்து மறுநாள் மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மஞ்சள் கலந்து முகத்தில் மாஸ்க் போல் அப்ளை செய்தால் சருமம் கருமை நீங்கி பொலிவு பெறும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவிவிடவும்.
தக்காளி , மஞ்சள் : தக்காளியை பேஸ்ட் போல் அரைத்து அதில் மஞ்சள் சிறிது சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் நச்சுகள் சேர்வதையும் அகற்றலாம்.
முல்தானி மெட்டி : முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் மாஸ்க் போல் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இவ்வாறு செய்ய எண்ணெய் பிசுக்கு நீங்கி ஃபிரெஷாக இருக்கும்.
பச்சை பயறு, ஆரஞ்சு பொடி : ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து அதை பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். இரவு பச்சை பயறை ஊற வைத்து மறுநாள் காலை மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பொடி கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இதனால் முகம் பருக்கள், கரும்புள்ளிகள் இன்றி பளிச்சென இருக்கும்.
புதினா , தேன் : புதினாவை அரைத்து அதோடு தேன் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடங்கள் வட்டப்பாதையில் மசாஜ் செய்து 10 நிமிடங்கள் காய வைத்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகம் ஃபிரெஷாக இருக்கும். பருக்கள் மறைந்து இறந்த செல்கள் நீங்கும்.
ஓட்ஸ் , தேன் : ஒட்ஸை பொடியாக்கில் அதனுடன் தேன் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். அழுக்குகளை வெளியேற்றி சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்கும்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.