நீங்கள் எப்போதாவது தாடி வளர்க்க முயற்சித்திருந்தால், நிச்சயமாக தாடி அரிப்பு எனும் எரிச்சலுக்கு ஆளாகியிருப்பீர்கள். அதுவும் ஒரு சிலருக்கு இந்த அரிப்பு அதிகமாகவே இருக்கும். தாடி அரிப்பு எதனால் ஏற்படுகிறது? மேலும் எரிச்சல் மற்றும் அரிப்பைக் குறைக்க நான் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளுக்கு விடை காண தொடர்ந்து படியுங்கள்.
தாடி நமைச்சல் என்பது மோசமான சுகாதாரம், வறண்ட முடிகள், முகப்பரு வெடிப்புகள் மற்றும் சோப்புகள் மற்றும் பிற பொருள்களை பயன்படுத்தி தாடியை பராமரிப்பதால் இந்த நிலை ஏற்படலாம். இது சருமத்தை எரிச்சலடைய செய்யலாம். மேலும், சில நேரங்களில் தாடி அரிப்பு பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்று போன்ற மிகவும் ஆழமான பிரச்சனையின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை இல்லாமல் இருக்க முடியையும் தாடியையும் சுத்தமாக வைத்திருங்கள். தாடி அரிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்பதற்கான குறிப்புகள் இதோ.
முகத்தில் வடியும் எண்ணெய் பிசுக்கு, தூசி, வியர்வை போன்ற காரணங்களால் தாடி அழுக்கு படிந்து அரிப்பை உண்டாக்கலாம். எனவே தினம் தாடிக்கென்றே நேரம் ஒதுக்கி தண்ணீரால் அலசி சுத்தம் செய்யுங்கள். பின் உடனே டவல் கொண்டு துடைத்துவிடுங்கள். தாடி பராமரிப்புக்காக பிரத்யேகமாக முகம் அல்லது தாடி வாஷ் பயன்படுத்தலாம்.
கழுவி துடைத்த பின்பு அப்படியே விட்டால் வறண்டு மீண்டும் அரிப்பு உண்டாகும். எனவே ஈரப்பதத்தை தக்க வைக்க beard oil அல்லது conditioner அப்ளை செய்யுங்கள். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் கூட போதுமானது.
தாடி முடியை இயற்கையாகவே எண்ணெய் பசையோடு வைத்திருக்க, ஜோஜோபா அல்லது ஆர்கான் எண்ணெயோடு தாடி கண்டிஷனரை பயன்படுத்தலாம். புதிய தாடி எண்ணெய் அல்லது கண்டிஷனரை பயன்படுத்தும் போது பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். ஏனெனில் சில தயாரிப்புகள் காமெடோஜெனிக்(comedogenic) மற்றும் முகப்பரு வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.
ஒவ்வொரு முறையும் தாடிக்கு ஷேவிங் செய்யும் போதும் ட்ரிம் செய்யும் போதும், tea tree எண்ணெய் அல்லது கற்றாழை போன்ற இயற்கையான aftershave wash அல்லது lotion, பயன்படுத்துங்கள். மிகவும் கடுமையான செயற்கை இராசயனங்கள் கொண்ட தயாரிப்புகளை தவிர்து விடுங்கள்.
ஆண்களே இந்த 10 அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீங்க... அது புரோஸ்டேட் புற்றுநோயாக இருக்கலாம்..!
அளவுக்கு அதிகமாக இருந்தாலும் உடனே தொற்றுகள் படிந்து அரிப்பை உண்டாக்கும். எனவே முடிந்தவரை தாடியை அடிக்கடி ட்ரிம் செய்து பராமரிப்பது நல்லது.
மருந்துகள்
தோல் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து களிம்புகள்(oinments) க்ரீம்கள் அல்லது லோஷன்களை பயன்படுத்தலாம். பொதுவான மருந்துகளில் லாக்டிக் அமிலம் மற்றும் யூரியா கொண்ட களிம்புகள் அடங்கும். இது வறண்ட சருமத்துக்கு சிகிச்சையளிக்க உதவும். மோசமான சரும அரிப்பு இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். Mupirocin (Bactroban) பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சையளிக்க Antifungal cream உதவும். உங்கள் தற்போதைய நிலையை அறிந்து உங்கள் மருத்துவர் அளிப்பதே சிறந்த சிகிச்சையாக இருக்கும்.
அறுவை சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகள் :
அரிப்பு நாள்பட்டதாக இருந்தால், அடிக்கடி தொற்று மற்றும் வீக்கம் ஏற்பட்டால், லேசர் முடி அகற்றுதலை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். மாறாக, காயங்கள் அல்லது carbuncle-களை அகற்ற அந்த இடத்தில் கீறல்கள் மேற்கொள்வதை உள்ளடக்கிய ஒரு செயல்முறையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
தோல் புண்கள் என்றும் அழைக்கப்படும் கார்பன்கிள்கள்(carbuncles) தோலுக்குள் ஏற்படும் கொதிப்புகளின் வெளிப்பாடாகும். அவை தொற்றுநோய்களை ஏற்படுத்தலாம் அல்லது அரிப்பை மேலும் மோசமாக்கலாம்.
ஃபோட்டோடைனமிக் (ஒளி) சிகிச்சை மற்றொரு சிகிச்சை தேர்வாகும். இது மயிர்க்கால்களின் தொற்று மற்றும் அழற்சியை எதிர்த்து போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Beard care, Monsoon