மூக்கு, தாடைகளில் உள்ள வெண்புள்ளிகளை போக்க இந்த எளிய முறையைப் பின்பற்றுங்கள்..!

நீக்காமல் விட்டால் அவை கரும்புள்ளிகளாகவும், அழுக்குகளாகவும் மாறி சருமத்தை சிதைத்துவிடும்.

மூக்கு, தாடைகளில் உள்ள வெண்புள்ளிகளை போக்க இந்த எளிய முறையைப் பின்பற்றுங்கள்..!
முகப்பரு : முகத்தில் ஆங்காக்கே தென்படும் பருக்கள் மறைய பூண்டை நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பின் அதில் தேன் மற்றும் கொஞ்சம் தயிர் சேர்த்து பருக்கள் உள்ள இடங்களில் அப்ளை செய்யுங்கள். 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இப்படி செய்து வர முகப்பருக்களின் அளவு குறைந்து அப்படியே மறைவதைக் காணலாம்.
  • Share this:
பொதுவாகவே முகத்தில் மூக்கு மற்றும் தாடைகளில் வெண்புள்ளிகள் உருவாகும். அதை நீக்காமல் விட்டால் அவை கரும்புள்ளிகளாகவும், அழுக்குகளாகவும் மாறி சருமத்தை சிதைத்துவிடும். இதற்காக பார்லர் சென்று ஃபேஷியல் செய்தால்தான் போக்க முடியும் என்றில்லை. வீட்டிலேயே இந்த எளியை டிப்ஸை பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள் :

மஞ்சள் - 1 tsp


தேன் - 1 tsp
பீலர் கிரீம்

செய்முறை :

கடைகளில் ஃபேஸ் பீலர் கிரீம், ஜெல் கிடைக்கும். அதை வாங்கிக்கொள்ளுங்கள். பீலரை 2 ஸ்பூன் எடுத்துக்கொளுங்கள். அதோடு மஞ்சள் மற்றும் தேன் கலந்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பேக்கை அப்ளை செய்யும் முன் மூக்கு, தாடையை சுடு தண்ணீரில் துணியை முக்கி துடைத்துக் கொள்ளுங்கள்

பின் பேக்கை மூக்கு மற்றும் தாடையில் அப்ளை செய்துகொள்ளுங்கள்.

காய்ந்ததும் அதை அப்படியே உரித்து எடுத்தால் அதிலேயே வெண்புள்ளிகள் அடியோடு வந்துவிடும்.

பார்க்க :

 

 
First published: April 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading