ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

sleeveless ஆடைகளை அணியும்போது அக்குள் கருமை சங்கடத்தை ஏற்படுத்துகிறதா..? இதோ இருக்கு தீர்வு..!

sleeveless ஆடைகளை அணியும்போது அக்குள் கருமை சங்கடத்தை ஏற்படுத்துகிறதா..? இதோ இருக்கு தீர்வு..!

அக்குள் கருமை

அக்குள் கருமை

வாசனை திரவியம், ஷேவ் செய்வது, வியர்வையால் இறந்த செல்கள் சேர்வது போன்ற காரணங்களால் அக்குள் கருப்பாக மாறுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆண், பெண், இருவருமே சந்திக்கும் பொதுவான பிரச்னைதான். வாசனை திரவியம், ஷேவ் செய்வது, வியர்வையால் இறந்த செல்கள் சேர்வது போன்ற காரணங்களால் கருப்பாக மாறுகிறது. இதை சில வீட்டுக் குறிப்புகளை பின்பற்றினாலே சரியாக்கிவிடலாம். இதற்காக சில காஸ்மெடிக்ஸ் கிரீம்கள் இருந்தாலும் வீட்டுக் குறிப்பு என்பது கெமிக்கல் இல்லாதது. பக்கவிளைவுகளை உண்டாக்காது.

  உருளைக்கிழங்கு : உருளைக் கிழங்கை அரைத்தால் அதிலிருந்து சாறு கிடைக்கும். அதை அக்குளில் தேய்த்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

  வெள்ளரி : வெள்ளரியை வட்டமாக நறுக்கி அதை 10 நிமிடங்களுக்கு தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் 10 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள்.

  எலுமிச்சை : எலுமிச்சையையும் வட்டமாக நறுக்கி அதை அக்குளில் தேயுங்கள். 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

  ஆரஞ்சு தோல் : ஆரஞ்சு தோலையும் அதன் சாறு படும் படி 10 நிமிடங்கள் தேய்த்துவிடுங்கள். பின் அப்படியே விட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

  உள்ளாடைகளால் ஏற்படும் கருப்புக் கோடுகள் மறைய என்ன செய்யலாம்..?

  மஞ்சள் : இரண்டு ஸ்பூன் எலும்மிசை சாறில் போதுமான மஞ்சள் கலந்து பேஸ்ட் போல் குழைத்து அதை இரு அக்குளிலும் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

  குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வாரம் இரண்டு முறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  பார்க்க :

  Published by:Sivaranjani E
  First published: