Home /News /lifestyle /

டீனேஜ் பிள்ளைகளுக்கு வரும் முகப்பருக்களை எப்படி அகற்றுவது..? நிபுணரின் ஆலோசனை..!

டீனேஜ் பிள்ளைகளுக்கு வரும் முகப்பருக்களை எப்படி அகற்றுவது..? நிபுணரின் ஆலோசனை..!

டீனேஜ் பிள்ளைகளுக்கு வரும் முகப்பருக்களை எப்படி அகற்றுவது..?

டீனேஜ் பிள்ளைகளுக்கு வரும் முகப்பருக்களை எப்படி அகற்றுவது..?

முகப்பரு தோன்றுவதற்கான முக்கிய காரணங்கள் பருவமடைதல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்தான். இதை நாம் தினசரி சாப்பிடும் உணவுமுறை மாற்றங்களால் சரி செய்ய முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா.

உடலில் உள்ள மிகப்பெரிய உறுப்பு தோல். உடலானது எந்த உணவு அல்லது வாழ்க்கை முறை மாற்றங்களையும் முதலில் அதன் அறிகுறியை தோலில்தான் வெளிப்படுத்தும். முகப்பரு தோன்றுவதற்கான முக்கிய காரணங்கள் பருவமடைதல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள்தான். இதை நாம் தினசரி சாப்பிடும் உணவுமுறை மாற்றங்களால் சரி செய்ய முடியும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மகிஜா.

புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான பூஜா மகிஜாஇன்ஸ்டாகிராமில் முகப்பருவை எவ்வாறு அகற்றுவது மற்றும் தெளிவான சருமத்தைப் பெறுவது என்பது குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். முக்கியமான உணவுப் பொருட்களையும் அதில் பகிர்ந்துள்ளார். பூஜா, "தெளிவான சருமத்தை பெறுவது மட்டும் உங்கள் டீனேஜ் ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தியின் அடையாளமில்லை, ஒவ்வொரு இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கை மற்றும் நேர்மறையான சுய உடலமைப்பை வளர்த்துக் கொள்ள உதவுகிறது." என்கிறார். அப்படி டீனேஜில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய உணவு விஷயங்கள் என்னென்ன என்பதையும் பகிர்ந்துள்ளார். அவை என்னென்ன பார்க்கலாம்.

வைட்டமின் டி நிலையைச் சரிபார்க்கவும் : வைட்டமின் டி அளவைக் கண்காணிப்பது முக்கியம் என்கிறார் பூஜா. வைட்டமின் டி வீக்கத்தைக் குறைக்கிறது. ஹார்மோன்களை சமன் செய்கிறது மற்றும் டெஸ்டோஸ்டிரோனைக் குறைக்கிறது. குறைந்த அளவு வைட்டமின் டி முகப்பருவுக்கு காரணமாக இருக்கலாம். எனவே விட்டமின் டி அளவை எப்போது கண்கானிப்பது அவசியம்.

லாக்டோஸைத் தவிர்க்கவும் : உணவுகளில் இருந்து பால் பொருட்களைக் குறைப்பது முகப்பருவை நிறுத்துவதற்கு நன்மை பயக்கும் என்கிறா. பால் பொருட்கள் குறைந்தது நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறு செய்தால் நீங்கள் வித்தியாசத்தைக் காணலாம்.



 




View this post on Instagram





 

A post shared by PM | Nutritionist (@poojamakhija)






புரோட்டீனை அதிகரிக்கவும் : புரோட்டீன் உட்கொள்ளல் முகப்பருவை குறைக்கிறது. புரோட்டீன் இன்சுலின் அதிகரிப்பை குறைக்கிறது. எனவே முகப்பருவை எதிர்த்துப் போராடுவது எளிது.

பதப்படுத்தப்பட்ட பேக்கரி பொருட்களை தவிர்க்கவும் : கேக், டோனட்ஸ், மஃபின்கள் மற்றும் குக்கீகள் போன்ற அதிக சர்க்கரை பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பூஜா அறிவுறுத்துகிறார். இவை அனைத்தும் இன்சுலின் அளவை அதிகரிக்கின்றன மற்றும் முகப்பருவை இன்னும் மோசமாக்குகின்றன.

உஷார்..! நினைவாற்றல் இழப்பை உண்டாக்கும் இந்த உணவுகளை தொடாதீர்கள்...

உடற்பயிற்சி : இன்றே நீங்கள் உடற்பயிற்சியைத் தொடங்குவது முக்கியம். உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது என்று பூஜா கூறுகிறார். இதனால், அதிக உயிரணு புத்துணர்ச்சி பெறும் மற்றும் குறைவான முகப்பரு வடுக்கள் ஏற்படுவதற்கு அதிக ஆக்ஸிஜனை உருவாக்கும் என்கிறார்.

மேலும் பூஜா , “ தண்ணீர் முக்கியமானது, தினமும் 2-2.5லி தண்ணீரை குடியுங்கள். மேலும் கார்போஹைட்ரேட் பானங்கள் மற்றும் சர்க்கரை நிறைந்த பழச்சாறுகளை தவிருங்கள். அவை மிக மோசமான இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து அதிக இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்கிறார்.

 

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Acne, Beauty Tips, Diet, Home remedies, Pimple, Teenage

அடுத்த செய்தி