முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சருமத்தில் உள்ள சன் டேனை நீக்க செய்ய வேண்டியது இதுதான்... விளக்கும் சரும நிபுணர்..!

சருமத்தில் உள்ள சன் டேனை நீக்க செய்ய வேண்டியது இதுதான்... விளக்கும் சரும நிபுணர்..!

சன் டேனை நீக்க நீங்கள் செய்ய வேண்டியது

சன் டேனை நீக்க நீங்கள் செய்ய வேண்டியது

அதில் சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர்கள் சருமம் மீது படும் போது டேன் உண்டாகிறது. அல்ட்ரா வயலட் கதிர்களில் ஒன்று யுவி ரேஸ் ஏ, மற்றொன்று யுவி ரேஸ் பி ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோடை காலத்தில் நாம் அனைவரும் நீரேற்றமாக இருப்பது அவசியம். பொதுவாக கோடை காலத்தில் வெளியே சென்று விட்டு வந்த பின்னர் சருமம் சற்று பழுப்பு நிறத்தில் மாறி இருப்பதை காணமுடியும். சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்க பல்வேறு ஸ்கின் கேர் முறைகளை கையாளுகிறோம். சில சமயங்களில் பலமுறை முயற்சித்தாலும் சன் டேன் எனப்படும் பழுப்பு நிறத்தை நீக்க முடியாமல் அவதிப்பட நேரிடும். எனினும் ஒரு சில எளிதான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஸ்கின் கேர் மூலம் அதனை சரி செய்ய முடியும்.

இதுகுறித்து தோல் மருத்துவர் ஆஞ்சல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஷேர் செய்துள்ளார். அதில் சன் டேனை அகற்றுவதற்கான வழிகளை பரிந்துரைக்கும் வீடியோவையும் இணைத்துள்ளார். அதில் சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து வெளிப்படும் அல்ட்ரா வயலட் கதிர்கள் சருமம் மீது படும் போது டேன் உண்டாகிறது. அல்ட்ரா வயலட் கதிர்களில் ஒன்று யுவி ரேஸ் ஏ, மற்றொன்று யுவி ரேஸ் பி ஆகும்.

இந்த யுவி பி கதிர்கள் என்பது சருமத்தில் மேல் அடுக்கில் எபிடெர்ம் பகுதியில் பாதிப்பை உண்டாக்குகிறது. யுவி ஏ கதிர்கள் சருமத்தில் முதல் அடுக்கை தாண்டி இரண்டாம் அடுக்கான மெலனோசைட்டுகளை மாற்றுகிறது. இந்த மெலனின் பிக்மெண்ட் அதிகரிக்கும் போது உண்டாகும் பழுப்பு நிறம் சன் டேன் என்று கூறப்படுகிறது. இது நமது சருமத்தை பாதுகாக்கும் இயற்கை முறையாகும்.

எனவே சன் டேன் என்பது நம் சருமத்தை வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கிறது. எனினும் சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்குவது அவசியம். சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை நீக்க 6-8 வாரங்கள் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் இருப்பது அவசியம் என டாக்டர் ஆஞ்சல் விளக்கியுள்ளார். முகத்தில் உள்ள பழுப்பு நிறத்தை விட உடலில் உள்ள பழுப்பு நிறம் நீங்க அதிக நேரம் எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

வெளியில் செல்ல நேரிட்டால் உடல் முழுவதும் கவரும் வகையிலான உடைகளை அணிந்து செல்ல வேண்டும் என விளக்கியுள்ள அஞ்சல், வெளியில் செல்லும் போது அவசியம் குடையுடன் செல்ல வேண்டும் என கூறுகிறார்.

சன்ஸ்கிரீனை சரியான முறையில் பயன்படுத்துவது எப்படி..? சரும நிபுணரின் விளக்கம்..!

சன்ஸ்கிரீன் அணியுங்கள் :

உங்கள் சருமத்தில் நேரடியாக சூரிய ஒளி படாமல் பாதுகாக்க சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது அவசியம். இதனால் சருமத்தில் டேன், உருவாகாமல் தடுக்க உதவுகிறது. எண்ணெய் பசை சருமம் இருப்பவர்கள், வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு தனித்தனியாக சன்ஸ்கிரீன் தற்போது விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி பயன்படுத்துங்கள்.

கிளைகோலிக் அமிலம், கிராண்டே எமிட் அமிலம் அல்லது லைகோரைஸ் சாறு, கோஜிக் அமிலம், லாக்டிக் அமிலம் ஆகியவை அனைத்து அமிலங்களும் டி-டானிங் செயல்முறையை துரிதப்படுத்த உதவுகின்றன. எனவே இந்த அமிலங்கள் நிறைந்த தயாரிப்புகளை பயன்படுத்துங்கள்.

உங்கள் சருமத்திற்கு தினமும் இரவில் கிளைகோலிக் அமிலம் 6% மற்றும் உடலுக்கு கிளைகோலிக் அமிலம் 12% என்ற அளவில் பயன்படுத்தவும். தினமும் காலையில் மாய்சரைஸர், சன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம்.

First published:

Tags: Skincare, Summer tips