வாயைச் சுற்றிலும் உள்ள கருமை அழகைக் கெடுக்கிறதா..? இதோ தீர்வு..!

என்னதான் மேக்அப் போட்டாலும் அந்த கருமை தோற்றம் தனித்துத் தெரியும். இதனால் ஒட்டுமொத்த அழகும் பொலிவிழக்கும்.

வாயைச் சுற்றிலும் உள்ள கருமை அழகைக் கெடுக்கிறதா..? இதோ தீர்வு..!
அழகு
  • News18
  • Last Updated: October 12, 2019, 10:49 PM IST
  • Share this:
முகக்கருமை நம் அழகைக் கெடுக்கும். அதில் குறிப்பாக வாயைச் சுற்றியுள்ள பகுதிதான் அதிகக் கருமையால் பாதிக்கப்படும்.  என்னதான் மேக்அப் போட்டாலும் அந்த கருமை தோற்றம் தனித்துத் தெரியும். இதனால் ஒட்டுமொத்த அழகும் பொலிவிழக்கும். இதுபோன்ற சங்கடங்களை இனியும் சந்திக்க வேண்டாம். இதோ தீர்வு. 

முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்குக் கொதிக்க வையுங்கள். பின் அதில் காட்டன் துணியை முக்கி பிழிந்து முகத்தைத் துடைத்துக்கொள்ளுங்கள். இதனால் மூடியிருக்கும் சருமைத் துளைகள் திறக்க உதவியாக இருக்கும். அப்போதுதான் நீங்கள் பயன்படுத்தும் பேஸ் மாஸ்க் நன்குச் செயல்படும்.

தேவையான பொருட்கள்


கடலை மாவு - 1 tsp

அரிசி மாவு - 1 tsp

முகத்திற்குப் பூசும் மஞ்சள் - 1 tspதயிர் - 1/2 tsp

எலுமிச்சை அரை மூடி : 1 ( எலுமிச்சை தோலை தூக்கி எரியாதீர்கள்)செய்முறை :

மேலே குறிப்பிட்ட அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்து நன்குக் கலந்து கொள்ளுங்கள். அதை முகம் முழுவதும் தேய்த்து 15 நிமிடங்கள் காத்திருங்கள். இறுதியாக எடுத்து வைத்துள்ள எலுமிச்சை தோலால் முகம் முழுவதும் தேய்யுங்கள்.

பின் குளிந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இறுதியாக ஏதாவதொரு மாய்ஸ்சரைஸரை அப்ளை செய்யுங்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading