கன்னத்தில் ஆங்காங்கே கருமையான திட்டுக்கள் உள்ளனவா..? இந்த வீட்டுக் குறிப்பை செய்து பாருங்கள்..!

கன்னத்தில் ஆங்காங்கே கருமையான திட்டுக்கள் உள்ளனவா..? இந்த வீட்டுக் குறிப்பை செய்து பாருங்கள்..!
மாதிரி படம்
  • Share this:
கன்னத்தில் ஆங்காங்கே தெரியும் கருமையான திட்டுக்கள் எந்த பியூட்டி கிரீம்களாலும் மறைக்க முடியாது. அதற்கு ஒரே வழி.. அவற்றை நீக்குவதுதான். எனவே இந்த வீட்டுக் குறிப்பை செய்து எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.

இதற்கு உங்களுக்குத் தேவையானது அரிசி மாவும், காஃபி பொடியும்தான். அதாவது ஒரு ஸ்பூன் காஃபி பொடி மற்றும் அரிசி மாவு இரண்டையும் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். அதில் 3 ஸ்பூன் சுடு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள்.
அதை திட்டுக்கள் உள்ள இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர கருமை திட்டுக்கள் தானாக மறைவதைக் காண்பீர்கள்.

இதில் பயன்படுத்தும் அரிசி மாவு சருமத்தை வெளிர வைக்கும் தன்மைக் கொண்டது. இதனால் கரும்புள்ளிகள், திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும். அதேபோல் காஃபி பொடி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்திற்கு பொலிவு தரும்.லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :
First published: May 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading