முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம் ?

மஞ்சளுக்கு மாற்றாக என்ன மாதிரியான அழகுக் குறிப்புகளைப் பின்பற்றலாம்..?

முகத்தில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம் ?
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: July 4, 2019, 5:22 PM IST
  • Share this:
பெண்களுக்கும் முகத்தில் ரோமங்கள் வளர்வது சகஜம். என்ன.. ஆண்களுக்கு தடித்த ரோமங்களாக கருகருவென வளரும். பெண்களுக்கு தலைமுடி போல் மென்மையாக அவர்களின் முக நிறத்திற்கு ஏற்ப வளரும். இருப்பினும் முகத்தில் முடி வளர்வதை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை என்ற காரணத்திற்காகத்தான் முன்னோர்கள் தொட்டு பாரம்பரிய வழக்கமாக மஞ்சள் தடவிக் குளிக்கின்றனர்.

இன்றைய பெண்கள் மஞ்சள் தடவிக் குளிப்பதில்லை என்பதால் மஞ்சளுக்கு மாற்றாக என்ன மாதிரியான அழகுக் குறிப்புகளைப் பின்பற்றலாம் என்று பார்க்கலாம்.

மக்காசோள மாவு : ஒரு முட்டையின் வெள்ளைப் பகுதி, ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் மக்காச்சோள மாவு ஆகியவற்றை ஒன்றாகப் பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் காத்திருக்கவும். இப்படி வாரம் 2-3 முறை செய்தால் ரோமங்கள் அகன்றுவிடும்.
கடலை மாவு : கால் கப் கடலை மாவு, கால் கப் தேன், ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு நான்கையும் ஒன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் சீராகத் தடவுங்கள். அது காய்ந்து உதிரும் வரைக் காத்திருந்து வெது வெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். இப்படி மாதம் இரண்டு முறை செய்தாலே போதும். நல்ல பலன் கிடைக்கும்.

இந்த பழங்களை சாப்பிட்டால் வழுக்கையிலிருந்து தப்பிக்கலாமாம்...! ஆராய்ச்சியாளர் சொல்வதை கேளுங்களேன்...சர்க்கரை : எலுமிச்சை மற்றும் சர்க்கரை இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு நன்குக் கலக்குங்கள். பின் அதை முகத்தில் தேய்த்துக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால் முடிகள் உதிரத் துவங்கும்.கொண்டைக் கடலை மாவு : கொண்டைக் கடலை மாவுடன் மஞ்சள் ஒரு ஸ்பூன் சேர்த்துக் பேஸ்டாகக் கலந்து முகத்தில் தடவி வர நாட்கள் செல்ல செல்ல முகம் உதிர்வதைக் கண்கூடக் காணலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

காய்ந்த இலந்தைபழம் : காய்ந்த இலந்தைப் பழத்தை மிக்ஸியில் மாவு போல் அரைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 கழித்துக் கழுவினால் முகம் தெளிவாக மாறும்.

இதையும் படிக்க ..

சருமத்திற்கு பொலிவு தரும் வைட்டமின் C நிறைந்த ஜூஸ் வகைகள்!

எண்ணெய் சருமம் முதல் மென்மையான சருமம் வரை... எந்த மாதிரியான அழகு பராமரிப்பு அவசியம்..?
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்