வேப்பிலையை பயன்படுத்தி பொடுகுத் தொல்லையை போக்கலாம்... எப்படி?
வேப்பிலையை பயன்படுத்தி பொடுகுத் தொல்லையை போக்கலாம்... எப்படி?
9. வேப்பிலை : வேப்பிலை சிறந்த கிருமிநாசினியாகவும், நுண்ணுயிரிகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாகவும் உள்ளது. வேப்பிலையை நன்கு அரைத்து அதனை உச்சந்தலையில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு தலையை ஷாம்பு கொண்டு தண்ணீரில் அலசுங்கள். முடிக்கு வேப்பிலையை பயன்படுத்துவதனால் பொடுகு, அரிப்பு, பூஞ்சை தொற்று ஆகிய பிரச்சனைகள் தீரும். முடி உதிர்தல் மற்றும் இளநரை ஆகியவற்றை போக்கி முடியின் வளர்ச்சியை தூண்ட உதவும்.
வேப்பிலை இயற்கையான முறையில் அதுவும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்தது.
பொடுகு, முடி அரிப்புத் தொல்லை மட்டுமல்லாது முடியின் வேர்களை சிதைத்து வளர்ச்சியை பாதிக்கும். இதனால் புதிய முடி உருவாவதும் தடைபடுகிறது. எனவே இயற்கையான முறையில் அதுவும் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த வேப்பிலையைப் பயன்படுத்தி எப்படியெல்லாம் பொடுகை விரட்டலாம் என்று பார்க்கலாம்.
வேப்பிலை தண்ணீர் : வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதை ஆற வைத்து தலைக்குக் குளித்தபின் இறுதியாக வேப்பிலை தண்ணீரில் தலையை அலசுங்கள். இப்படி ஒவ்வொரு தலைக் குளியலுக்கும் செய்தால் பொடுகு நீங்கும்.
வேப்பிலை ஹேர் பேக் : வேப்பிலையை அரைத்து அல்லது வேப்பிலை பொடியில் எலுமிச்சை சாறு பிழிந்து மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதை தலையின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடங்கள் காய விடுங்கள். பின் தலைக்குக் குளித்துவிடுங்கள்.வாரம் இரண்டு முறை செய்யலாம்.
வேப்பிலை ஹேர் ஆயில் : தேங்காய் எண்ணெய் ஒரு கப் கொதிக்க வைத்து அதில் 20 வேப்பிலை சேர்த்து 15 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள். இறக்கியதும் , எலுமிச்சை சாறு மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துக் கலந்து தலைக்கு தேய்த்து மசாஜ் செய்து பின் ஒரு மணி நேரம் ஊற வைத்துத் தலைக்குக் குளிக்கவும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.
பார்க்க :
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.