நாளை ஹோலியை கொண்டாட இந்தியா தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துகொள்வதும் நல்லது. ஹோலி வண்ணங்கள் மூலம் மகிழ்ச்சியை கொண்டு வருவதாக இருந்தாலும் அதற்கு பின் அந்த வண்ணங்களை அகற்றுவது பெரும் பாடாய் இருக்கும். ஆனால் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். உங்களுக்கான சில குறிப்புகள் இதோ...
குளிர்ந்த நீரைப் பயன்படுத்தவும் : நீங்கள் வண்ணங்களைக் கழுவும்போது சூடான நீரைத் தவிர்க்கவும். "சூடான நீர் வண்ணங்களை சருமத்தில் ஒட்ட வைக்குமே தவிர அகற்றாது. கூடுதலாக அவற்றை அகற்றுவதை இன்னும் கடினமாக்கிவிடும். மேலும், உங்கள் சருமத்தில் ஒட்டாமல் மேலோட்டமாக இருக்கும் உலர்ந்த வண்ணப்பொடிகளை தண்ணீரில் கழுவுவதைத் தவிர்க்கவும். "உலர்ந்த வண்ணப்பொடியை கழுவுவது அவற்றை மேலும் பரவச் செய்யும். அதற்கு பதிலாக, ஒரு துணி அல்லது உங்கள் கைகளைப் பயன்படுத்தி முடிந்தவரை அகற்ற முயற்சிக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் குளித்துவிடுங்கள். உங்கள் முகத்தில் உள்ள வண்ணத்தை அகற்ற பால் பயன்படுத்தி நன்கு மசாஜ் செய்து அகற்றுங்கள்.
குளித்த பிறகு, சருமத்தை சுவாசிக்கச் செய்வதும், இலகுவாக்குவது அவசியம். எனவே லேசான ஆனால் ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள். இதனால் வண்ணப்பொடிகளின் கெமிக்கல் ஒவ்வாமை , எரிச்சல் இருந்தாலும் அடங்கும். அதோடு இது சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் வெடிப்புகளை சமாளிக்கிறது.
ஹோலிக்குப் பின் தலைமுடியில் இருந்து நிறத்தை நீக்க டிப்ஸ் :
ஹோலி கொண்டாட்டத்திற்குப் பின் உடனே உங்கள் தலைமுடியை ஷாம்பு கொண்டு அலச அவசரப்பட வேண்டாம். வீட்டிற்கு வந்ததும் முதலில் தலையில் தூவப்பட்டிருக்கும் பொடியை சீப்பு கொண்டு அல்லது டவல் பயன்படுத்தி தட்டி விடுங்கள். இதனால் மேலோட்டமாக இருக்கும் பொடிகள் உதிர்ந்துவிடும். அதன் பிறகு தயிர் பயன்படுத்தி தலைமுடி முழுவதும் தடவவும். இதை சுமார் 45 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின்னர் உங்கள் தலைமுடியை சாதாரண நீரில் கழுவவும். சுடு தண்ணீர் பயன்படுத்தாதீர்கள். பின்னர் உங்கள் தலைமுடியை வழக்கம் போல் ஷாம்பு பயன்படுத்தி அலசவும். இது உங்கள் தலைமுடியில் உள்ள நிறத்தை விரைவாக அகற்ற உதவும். மேலும் இது உங்கள் முடிக்கு ஏற்படும் அனைத்து சேதங்களையும் குறைக்கும்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.