முகத்தில் கரும்புள்ளிகளை அகற்ற சரியான வீட்டுக்குறிப்பு இதுதான்..!

"தொடர்ந்து இதனை செய்து வர நல்ல பலனை எதிர்பார்க்கலாம்"

முகத்தில் கரும்புள்ளிகளை அகற்ற சரியான வீட்டுக்குறிப்பு இதுதான்..!
கரும்புள்ளிகளை அகற்ற சரியான வீட்டுக்குறிப்பு இதுதான்..!
  • News18
  • Last Updated: November 2, 2019, 3:37 PM IST
  • Share this:
தேவையற்ற அழுக்குகள் சேர்ந்து உருவாவதே கரும்புள்ளிகள். இவற்றை உடனுக்குடன் அகற்றவில்லை எனில் முகம் பளிச்சிடாத பல்பு போல் ஆகிவிடும். இதை அகற்ற பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. இந்த எளிய வீட்டுக் குறிப்பை செய்யுங்கள்.

தேன் மற்றும் முட்டை வெள்ளை பகுதி   : முட்டை வெள்ளைக்கருவில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்குக் கலக்குங்கள். அதை முகத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று லேயர்களாக அப்ளை செய்யுங்கள். 20 நிமிடங்கள் காத்திருந்து சாதாரண தண்ணீரில் கழுவுங்கள். வாரம் இரண்டு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் முட்டை வெள்ளை : இரண்டு ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 முட்டை வெள்ளைப் பகுதியை சேர்த்து நல்ல பேஸ்ட் போல கலக்குங்கள். முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். கழுவும்போது நன்கு ஸ்கரப் செய்து கழுவுங்கள்.
சர்க்கரை மற்றும் முட்டை வெள்ளை பகுதி : ஒரு முட்டை வெள்ளைப் பகுதியில் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்குங்கள். அந்த பேஸ்டை முகத்தில் வட்டப் பாதையில் தேய்த்து ஸ்க்ரப் செய்யுங்கள். பின் 10 நிமிடங்கள் காயவிட்டு தண்ணீரில் கழுவுங்கள். தினமும் செய்ய கரும்புள்ளிகள் அகன்றுவிடும்.

ஓட்ஸ் மற்றும் முட்டை வெள்ளைப் பகுதி : இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் முட்டை வெள்ளை இரண்டையும் நன்கு பேஸ்ட் போல் கலந்து முகத்தில் தடவி வட்டப் பாதையில் ஸ்க்ரப் செய்யுங்கள். 15 நிமிடங்கள் காத்திருந்து கழுவுங்கள். தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்