கழுத்தில் இருக்கும் கருமையை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ..

காட்சி படம்

கழத்தை சுற்றி கருமையாக உள்ளதா ? அப்ப இதை பண்ணுங்க..

  • Share this:
    கழுத்தை சுற்றிலும் கருமையாக இருந்தாலே சற்று சங்கடமாக இருக்கும். இது சுகாதாரத்தில் அக்கறை செலுத்தவில்லை என்றாலும் அல்லது ஒவ்வாமை காரணமாகவும் வரலாம். அப்படி வந்துவிட்டால் எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.

    கற்றாழை : கற்றாழையில் சதையை மட்டும் தனியாக எடுத்து தினமும் தேய்த்து மசாஜ் செய்து ஊற வையுங்கள். இப்படி தொடர்ந்து செய்ய சரியாகும்.

    ஆப்பிள் சிடர் வினிகர் : ஆப்பிள் சிடர் வினிகரில் பஞ்சை நனைத்து கழுத்தை சுற்றிலும் தடவி வர கருமை நீங்கும்.

    பாதாம் எண்ணெய் : பாதாம் எண்ணெய்யை இரவு தூங்கும் முன் கழுத்தை சுற்றிலும் தேய்த்து மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை சுடுதண்ணீரில் கழுவிவிடுங்கள். தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்கும்.

    தயிர் : தயிரை கழுத்தை சுற்றிலும் தடவிக்கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். தினமும் செய்ய கருமை நீங்கும்.

    Also read : உங்களுக்கு ஆய்லி ஸ்கின்னா? இப்படி டீ டாக்ஸ் பண்ணுங்க..

    உருளைக்கிழங்கு : கருமை நிறத்தை நீக்குவதில் உருளைக்கிழங்கு சாறு ஆற்றல் மிக்கது. எனவே உருளைக்கிழங்கு சாறை கழுத்தை சுற்றிலும் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் தண்ணீரில் கழுவிவிடுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: