உள்ளாடைகள் அணியும் இடத்தில் கருப்புக்கோடு வருவது இயல்புதான். இருப்பினும் அது காண அத்தனை அழகாக இருக்காது. குறிப்பாக பெண்கள் பிரா அணியும் இடங்களில் எலாஸ்டிக்கால் கருப்புக் கோடுகள் வந்திருக்கும். இதை பெண்கள் விரும்ப மாட்டார்கள். இந்தக் கோடுகளை நீக்க சில வீட்டுக்குறிப்புகளை பின்பற்றலாம்.
தேன் , எலுமிச்சை சாறு : 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் தேன் கலந்து கருப்பு கோடுகள் உள்ள உடங்களில் தடவ வேண்டும். அதை சருமம் உறிஞ்சும் வரை காய விடுங்கள். அதன் பின் நீரினால் கழுவிவிடுங்கள்.
ஆரஞ்சு தோல், தேன் : ஆரஞ்சு தோலை வெயிலில் காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள். அதில் பல அழகுக் குறிப்புகளுக்கு உதவும். அந்த ஆரஞ்சுப் பொடியில் தேன் ஊற்றி அதை பேஸ்ட் போல் குழைத்துக்கொள்ளுங்கள். அதை கருப்புக் கோடு உள்ள இடத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.
கடலை மாவு , எலுமிச்சை சாறு : 1 ஸ்பூன் கடலை மாவுடன் 10 மிலி எலுமிச்சை சாறு ஊற்றி பேஸ்ட் போல் குழைத்து தடவ சரியாகும். தேவையற்ற முடிகள் வளர்வதை தடுக்கவும் இந்த பேக்கை அப்ளை செய்யலாம்.
முட்டை வெள்ளை மற்றும் சர்க்கரை : முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரி , கற்றாழை : வெள்ளரி மற்றும் கற்றாழை இரண்டையும் பேஸ்ட் போல் குழைத்து தடவுங்கள்.
பேக்கிங் சோடா : பேக்கிங் சோடாவையும் தண்ணீரில் குழைத்து கோடுகள் உள்ள இடத்தில் தடவுங்கள்.
ஆலிவ் எண்ணெய் : கருப்புக் கோடுகள் உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவி மசால் செய்து இரவு தூங்கிவிடுங்கள். காலை எழுந்து கழுவிக்கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை செய்து வாருங்கள். பலன் கிடைக்கலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.