முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோடைக்காலத்தில் தலைமுடி சேதத்தை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

கோடைக்காலத்தில் தலைமுடி சேதத்தை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய விஷயங்கள்..!

தலைமுடி பிரச்சனை

தலைமுடி பிரச்சனை

நேரடி சூரிய ஒளியில் ஏராளமான நன்மைகள் உள்ளன, அதே சமயத்தில் சருமம், தலைமுடி என எதை வேண்டுமானாலும் சேதப்படுத்தவும், மோசமான எதிர்வினைகளை உருவாக்கவும் முடியும்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பது ஒருபுறம் என்றால், சருமத்தையும், கூந்தலையும் அதன் புற ஊதாக்கதிர்களிடம் இருந்து காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் நெருங்க நெருங்க, கொளுத்தும் சூரியன் நம்மை வாட்டி வதைக்க ஆரம்பித்து விடுகிறது. வெயிலின் கொடூரத்தில் இருந்து தப்பிக்க வீட்டிலேயே பணிபுரிவது அல்லது ஏர் கண்டினரின் குளுமைக்கு பின்னால் நாள் முழுவதும் மறைந்து கொள்வது அனைத்து தரப்பு மக்களுக்கும் சாத்தியமானது அல்ல. என்ன தான் வெயில் கொளுத்தி எடுத்து, வியர்வை ஆறாக ஓடினாலும் வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு என கட்டாயம் வெளியே செல்ல வேண்டிய வேலைகள் பல உள்ளன.

ஆனால் சூரியன் கொளுத்தி எடுக்கும் நேரங்களில் வெளியே செல்வது என்பது உங்கள் உடல் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தில் சாத்தியமான பாதிப்பிற்கு உங்களை உட்படுத்தும். நேரடி சூரிய ஒளியில் ஏராளமான நன்மைகள் உள்ளன, அதே சமயத்தில் சருமம், தலைமுடி என எதை வேண்டுமானாலும் சேதப்படுத்தவும், மோசமான எதிர்வினைகளை உருவாக்கவும் முடியும்.

அதிக வெப்பம் நீரிழப்பு, உடல் வெப்பமடைதல், தோல் அலர்ஜி (சூரியனில் வெளிப்படுவதால் ஏற்படுவது) மற்றும் முடிக்கு சில சேதங்களை விளைவிக்கிறது. பொதுவாக, ஒருவரின் தலைமுடியில் சுட்டெரிக்கும் வெயிலின் விளைவுகளை மக்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள். உங்கள் தலைமுடி சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படும் போது, ​ கவனக்குறைவால் பாதுகாப்பு இல்லாமல் விட்டு விட்டீர்கள் என்றால், அது முடியை வறண்டு போக வைத்து கரடுமுரடான தோற்றத்தை கொடுக்கும். எனவே கோடை காலத்திலும் கூந்தலை பளபளக்க பராமரிக்க தேவையான வழிமுறைகளை அறிந்து கொள்வது நல்லது.

1. ஷாம்பு, கன்டிஷ்னரில் கவனம் தேவை:

அதிக பணம் செலுத்தி பாத்ரூம் ஷெல்ஃப்களில் நீங்கள் அடுக்கி வைத்துள்ள ஷாம்பு, கன்டிஷ்னர் போன்ற கூந்தல் பராமரிப்பு பொருட்கள் மீது அதிகம் கவனம் தேவை. ஷாம்புகளில் ஏராளமான இரசாயனங்கள் உள்ளன, அவை உங்கள் தலைமுடியை சரிசெய்வதற்குப் பதிலாக நீண்ட காலத்திற்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தும்.

முடி பராமரிப்பில் மிக முக்கியமான விஷயம், உங்கள் தேவைகளை நன்கு பூர்த்தி செய்யும் ஷாம்பூவைப் பயன்படுத்துவதாகும், மேலும் உங்கள் ஒவ்வாமைகளை மனதில் வைத்துக்கொள்ளலாம். கூடுதலாக, பெரும்பாலான ஷாம்பூக்களில் உள்ள அதிகப்படியான இரசாயனங்கள் காரணமாக, நீங்கள் நிச்சயமாக இயற்கை பொருட்கள் மற்றும் மூலிகை/கரிமப் பொருட்கள் அடங்கி ஷாம்புவிற்கு மாறுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

ஹோரோயின்களை போல் பளபளக்கும் கால்களை பெற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க...

2. குளியலுக்கு பயன்படுத்தும் தண்ணீர்:

உப்பின் தன்மை அதிகமுள்ள மற்றும் குறைவாக உள்ள தண்ணீர் பற்றி நம்மில் பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருப்போம். இவற்றை கடின நீர், மென்மையான நீர் என இரண்டு வகைகளாக பிரிக்கலாம். கடின நீர் என்பது இயற்கையாக நிகழும் மெக்னீசியம் மற்றும் கால்சியம் உப்புகளைக் கொண்ட ஒரு வகையான நீராகும் மற்றும் தோலிலும் முடியிலும் ஒரு கடினமான விளைவை ஏற்படுத்தக்கூடியது. கடின நீரைப் பயன்படுத்துவது சருமத்தில் ஒரு மெல்லிய படலத்தை உருவாக்கும், அது ஈரப்பதத்தில் ஊடுருவி முடிக்கான ஈரப்பதத்தை கட்டுப்படுத்துகிறது.

இதனால் கூந்தல் மந்தமாகவும், வறட்சியாகவும் காணப்படுவதோடு, முடி உதிர்வதற்கும் வழிவகுக்கும். ஆனால் அதிக உப்பு தன்மை இல்லாத நீரானது முடிக்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் ஆச்சரியமான பலன்களை கொடுக்க கூடியது. ஒரு பயனுள்ள உதவிக்குறிப்பு என்னவென்றால், குளித்த பிறகு உங்கள் தலைமுடியை குளிர்ந்த மென்மையான நீரில் அலசுவது பளபளப்பான கூந்தலை பெற உதவும்.

3. எண்ணெய்கள்:

எண்ணெய்கள் கூந்தலுக்கு ஒரு இயற்கையான, மென்மையான பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது. இது முடி ஒன்றுடன் ஒன்று உராய்ந்து சேதமடைவதை தடுக்க உதவுகிறது. மேலும் எண்ணெய் முடியை சிக்கில் இருந்து பாதுகாப்பதோடு, உச்சந்தலைக்கும் ஊட்டமளிக்கிறது. கூந்தலில் எண்ணெய் தடவுவதால் வேர் வலிமை, முடியின் செழுமை , உச்சந்தலையில் சூட்டை குறைப்பது, முடிக்கு தேவையான நீரேற்றம் ஆகியன கிடைக்கிறது. கோடை காலத்தில் கூந்தலுக்கு எண்ணெய் தேங்காய் எண்ணெய் மற்றும் புதினா எண்ணெய்யை பயன்படுத்துவது சிறப்பானது.

4. ஸ்கார்ப் அணிந்து வெளியே செல்லுங்கள்:

சூரியனின் வெப்பத்தில் இருந்து தலைமுடியை பாதுகாக்க மற்றொரு பாதுகாப்பான வழி ஸ்கார்ப் கட்டிக்கொள்வது ஆகும். வெயில் நேரத்தில் வெளியே செல்கிறீர்கள் என்றால் தலைக்கு ஸ்கார்ப் தட்டிக்கொள்வது அல்லது குடை பிடித்துச் செல்வது புற ஊதா கதிர்களிடம் இருந்து தலைமுடி மற்றும் உச்சந்தலையை பாதுகாக்க உதவும். உங்கள் தலைமுடியைப் பாதுகாப்பதற்கான மற்றொரு வழி, வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஆழமான கண்டிஷனிங் செய்வதாகும். முடியை கண்டிஷனிங் செய்வது, முடியில் ஏற்பட்டுள்ள வெடிப்பை சரி செய்யவும், உச்சந்தலையில் உருவாகும் நுண்துளை குறைக்கவும் உதவுகிறது. மேலும் கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைத்து, வறண்ட தோற்றத்தை மாற்ற உதவுகிறது.

5. உணவு பழக்க வழக்கம்:

கோடை காலம் என்றில்லை, அனைத்து தருணங்களிலும் கூந்தலை மென்மையாகவும், அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க ஊட்டச்சத்து மிக்க உணவு மிகவும் இன்றியாமையாதது. எனவே அனைத்து நிறங்களிலும் உள்ள பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆக்சிஜனேற்ற சேதத்தை தடுக்க மிகவும் தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும் வகையில் உணவுமுறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

First published:

Tags: Hair care, Summer Heat