Home /News /lifestyle /

நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவரா.? ஸ்கின் பிக்மென்டேஷனை சரி செய்ய உதவும் சிகிச்சை முறைகள்.!

நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்டவரா.? ஸ்கின் பிக்மென்டேஷனை சரி செய்ய உதவும் சிகிச்சை முறைகள்.!

skin Care

skin Care

Skin Pigmentation | 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சந்திக்கும் பொதுவான சரும பிரச்சனைகளில் ஒன்று ஸ்கின் பிக்மென்டேஷன். முகத்தில் ஏற்படும் அசாதாரண கரும்புள்ளிகள் மற்றும் உடலில் நிகழும் சிறிய நிறமாற்றங்கள் உள்ளிட்ட அறிகுறிகள் ஸ்கின் பிக்மென்டேஷனை குறிக்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஸ்கின் பிக்மென்டேஷன் பொதுவாக ஹைப்பர்-பிக்மென்டேஷன் (hyper-pigmentation) என்றும் அழைக்கப்படுகிறது. இது சருமத்தில் உள்ள சில சிறப்பு செல்கள் மெலனின் எனப்படும் நிறமியை அதிகமாக உற்பத்தி செய்யும் போது ஏற்படுகிறது. மெலனின் என்பது சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் நிறமி ஆகும் முக்கியமாக சூரிய ஒளி, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் சில மருந்துகளால் ஹைப்பர்-பிக்மென்டேஷன் ஏற்படலாம். தோலின் திட்டுகள் சுற்றியுள்ள தோலை விட கருமையாக இருக்கும் ஒரு பொதுவான மற்றும் பாதிப்பில்லாத நிலை என்றாலும் சரும அழகை பாதிப்பதாக இருக்கிறது.

முன்பெல்லாம் மருத்துவமனையில் இதற்கான தோல் சிகிச்சைகளை யாரும் எடுத்து கொள்ள மாட்டார்கள் என்று இருந்த நிலை மாறி, சமீபகாலமாக அதிக பெண்கள் பிக்மென்டேஷனுக்காக சிகிச்சை பெறுகின்றனர். மைக்ரோபிளேடிங், நவீன அழகியல் தோல் புத்துணர்ச்சி சிகிச்சைகள் மற்றும் தோல் மேம்பாட்டிற்கான சிகிச்சைகள் போன்றவை பாதுகாப்பானவை மட்டுமல்ல, மருத்துவ ரீதியாக பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவை. எனினும் குறிப்பிட்ட சருமத்திற்கு என்ன தேவை மற்றும், யாரிடம் சிகிச்சை பெறுவது என்பதை பற்றி மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் சரியான வழிகாட்டுதலுடன் இந்த சிகிச்சைகளை முயற்சிக்க வேண்டும். சருமத்தை மாய்ஸ்டரைசிங்காக வைத்திருப்பது மிகவும் எளிது என நினைக்கலாம். ஆனால் ஒருவர் 40 வயதை கடந்த பின் சருமத்தை ஹைட்ரேட்டாக வைப்பது கடினம். நன்கு ஹைட்ரேட்டாக உள்ள சருமம் என்பது அனைத்து செல்களும் முழுமையாக ஹைட்ரேட்டாக இருக்கும் இடம் ஆகும்.இந்த ஹைட்ரேட்டட் செல்கள் சருமத்தை சரி செய்து ஆரோக்கியமாக வைத்திருக்கும் திறனை கொண்டுள்ளன. இதனால் சருமம் போதுமான அளவு ஹைட்ரேஷன், மென்மை மற்றும் மீள்தன்மை கொண்ட சீரான ஸ்கின் டோன் மற்றும் அமைப்பை கொண்டிருக்கும். அதுவே வயது ஏறும் போது தோல் சீரற்றதாக, மந்தமாக மற்றும் வறண்டதாகவும் இருக்கும். நெகிழ்ச்சித்தன்மையை இழக்கும். இதனால் மோசமான தோல் அமைப்பு மற்றும் பிக்மென்டேஷன் ஏற்படுகிறது.

Also Read : உதடுகள் சுருங்கி பொலிவிழந்து காணப்படுகிறதா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்க..

இழந்த சரும அமைப்பு மற்றும் சரும பளபளப்பை மீட்டெடுக்க பல தோல் சிகிச்சைகள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே வாக்குறுதியை வழங்குகின்றன. எனவே பிக்மென்டேஷனால் பாதிக்கப்படும் ஒருவர் அவர் சருமத்திற்கு ஏற்ற பல மேம்பட்ட அழகியல் நுட்பங்களை ஆராய்ந்து தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். பெரும்பான்மையான மக்களுக்கு நல்ல முடிவுகளை வழங்கி உள்ள ஒரு சிகிச்சையாக multimodality aesthetic skin rejuvenation plan இருக்கிறது.

Also Read : சருமத்தை இயற்கையான முறயில் பொலிவாக்க உதவும் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க்...

இந்த சிகிச்சை சருமத்தின் இயற்கையான பளபளப்பை மேம்படுத்துவதன் மூலம் இளமையாக தோற்றமளிக்க உதவுகிறது. ஸ்கின் செல்களைத் தூண்டி போதுமான ஹைட்ரேஷன் மற்றும் ஊட்டச்சத்து அளிப்பதன் மூலம் இந்த சிகிச்சை செயல்படுகிறது. இந்த சிகிச்சையானது சிறிய ஊசிகளின் உதவியுடன், நேரடியாக தோலில் உள்ள நுண் துளிகளில் சிகிச்சை பொருட்களை வைப்பதன் மூலம் செய்யப்படுகிறது. ஊசிகள் தோலின் ஆழமான அடுக்குகளுக்குள் நுழைந்து தோல் தடைகளை தாண்டி ஊட்டச்சத்தை தோலுக்குள் செலுத்துகிறது. இறுதியாக இது வயதாவதால் தோலில் ஏற்படும் மாற்றங்களை சரி செய்கிறது.
Published by:Selvi M
First published:

Tags: Lifestyle, Skin Care

அடுத்த செய்தி