• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Hair Fall | முடி உதிர்வா? இந்த லைஃப்ஸ்டைல் மாற்றங்களை பின்பற்றுங்கள்..

Hair Fall | முடி உதிர்வா? இந்த லைஃப்ஸ்டைல் மாற்றங்களை பின்பற்றுங்கள்..

முடி உதிர்வு

முடி உதிர்வு

குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது.

  • Share this:
    'தலைமுடி பிரச்னை தலையாய பிரச்னை' என சொல்லும் அளவுக்கு தலைமுடி பிரச்னை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். முடி ஷார்ட்டாக இருந்தால் போதும் என நினைப்பவர்கள் கூட, கொஞ்சம் இருந்தாலும் அடர்த்தியாக தெரிய வேண்டும் என்பார்கள். சரி உங்கள் ஆரோக்கியமாக வளர என்னவெல்லாம் முக்கியம் எனத் தெரியுமா?

    தலையில் அழுக்கு, தூசு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்குக் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். குளிக்கும் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகமிருந்தாலும் முடி கொட்ட வாய்ப்புள்ளது. மழைநீரில் தாதுக்கள் அதிகம் இருக்காது என்பதால் மழைக்காலத்தில் அந்த நீரைச் சேகரித்துக் குளிக்கப் பயன்படுத்தலாம். உப்புத்தன்மை குறைவாக உள்ள நிலத்தடி நீரையும் பயன்படுத்தலாம். சூடான நீரை தலையில் ஊற்றினால் ஸ்கால்ப் பாதித்து முடி கொத்துக் கொத்தாக கொட்ட வாய்ப்புள்ளது. எனவே வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதே நல்லது.

    துரித உணவுகளைத் தவிர்த்து, சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளைச் சாப்பிட வேண்டும். உணவில் அதிகம் புரதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு வகைகள், சோயா, தேங்காய்ப்பால், கொண்டைக்கடலை, வேர்க்கடலை, பப்பாளி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதம் நிறைந்துள்ளது. சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியமானது. மனஅழுத்தம் தரக்கூடிய சம்பவங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இதற்கு யோகாவும் உடற்பயிற்சியும் நல்ல தீர்வை தரும். தூக்கமின்மையும் முடி உதிர்வுக்கு முக்கியக் காரணம் என்பதால், குறித்த நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல்சூடு குறையும். சூடு காரணமாக முடி கொட்டுவதைத் தடுக்கலாம். கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளுக்கு பதில் மருத்துவரின் ஆலோசனையுடன் உங்கள் முடியின் தன்மைக்கு ஏற்ப மைல்டான ஷாம்பூவை உபயோகிக்கலாம். அதோடு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். நொறுக்கு தீனிகளுக்கு பதிலாக நட்ஸ், உலர் திராட்சை, பேரீச்சை போன்றவற்றை சாப்பிடலாம். முடியைப் பராமரிக்க ஆயிரக்கணக்கில் பார்லரில் செலவழிக்காமல், இப்படியான வாழ்வியல் மாற்றங்களை செய்தாலே போதும்..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: