Home /News /lifestyle /

உங்கள் சரும வகைகளுக்கு ஏற்ற சரியான மாய்ஸ்சரைசரை எவ்வாறு தேர்வு செய்வது..?

உங்கள் சரும வகைகளுக்கு ஏற்ற சரியான மாய்ஸ்சரைசரை எவ்வாறு தேர்வு செய்வது..?

மாய்ஸ்சரைசர்

மாய்ஸ்சரைசர்

சருமத்தில் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக அடிப்படையான விஷயம். இது நமது சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளித்து மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும்.

அழகு என்று வரும் போது சிறிய விஷயங்கள் கூட மிகவும் முக்கியம். நமது உடலின் மிகவும் சென்சிட்டிவான பாகங்களில் ஒன்று சருமம். அதை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அதை சரியான முறையில் கவனிக்க வேண்டும்.

சருமத்தில் ஒரு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவது நமது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க மிக அடிப்படையான விஷயம். இது நமது சருமத்திற்கு ஊட்டச்சத்தை அளித்து மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்திருக்கும். ஒருவரின் சருமத்திற்கு சரியான மற்றும் பொருத்தமான மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுப்பதில் பல நுணுக்கங்கள் உள்ளன. வசிப்பிட காலநிலை, வாழ்க்கை முறை, உணவுமுறை, மருந்துகள், சில மருத்துவ அல்லது தோல் நோய் நிலைகள், ஹார்மோன்கள், தோல் பராமரிப்பு முறை மற்றும் மிக முக்கியமாக தோல் வகை ஆகியவை உங்கள் சருமத்திற்கு ஏற்ற சிறந்த மாய்ஸ்சரைசர் எது என்பதை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கின்றன.



சரும வகைகளுக்கு ஏற்ற சரியான மாய்ஸ்சரைசரை எவ்வாறு தேர்வு செய்வது?

சாதாரண சருமத்திற்கான (Normal Skin) மாய்ஸ்சரைசர்கள்..

சாதாரண சருமம் கொண்டவர்கள் மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுக்கும் போது மிகவும் ஹெவியான அல்லது அதிக தண்ணீர் (watery) இல்லாத தயாரிப்பா என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதே போல . தயாரிப்பின் வாசனை, கன்சிஸ்டென்சி மற்றும் ஃபீலை கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட தயாரிப்பு உங்கள் ஸ்கின் டோன் மற்றும் ஸ்கின் சென்ட்டுடன் சரியாக மேட்ச்சாகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை உணர்த்தும் சரும பாதிப்பு அறிகுறிகள்..

எண்ணெய் சருமத்திற்கான (Oily skin) மாய்ஸ்சரைசர்கள்..

எண்ணெய் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் தேவையில்லை என்பது பொதுவான கட்டுக்கதை. மாய்ஸ்சரைசர்கள் சருமத்தை பராமரிக்க உதவுவதால், சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. ஆயில் ஸ்கின் கொண்டவர்களுக்கு லைட்வெயிட், நான்-காமெடோஜெனிக் மற்றும் ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசர்கள் நல்ல பலனை தருகின்றன. சருமம் ஏற்கனவே எண்ணெய் பசையுடன் இருப்பதால், அதிக எண்ணெய் சேர்க்க தேவை இல்லை. சரும துளைகளை அடைக்காத லேசான மாய்ஸ்சரைசர் பயனப்டுத்தினால் கூட போதுமானது. எண்ணெய் பசை சருமத்திற்கு மாய்ஸ்சரைசர்களில் உள்ள பொருட்களான பெட்ரோலியம் ஜெல்லி, லானோலின் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்



வறண்ட சருமத்திற்கான (Dry Skin) மாய்ஸ்சரைசர்கள்..

வறண்ட சருமம் பெரும்பாலும் கரடுமுரடாக இருக்கும், சில பகுதிகளில் சிவப்பு திட்டுகள் இருக்கும். துளைகள் சிறியவை மற்றும் தோல் இறுக்கமாக உணரலாம். வறண்ட சருமம் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் சரும வறட்சிக்கு ஏற்ப ஹெவி மற்றும் ரிச் மாய்ஸ்சரைசர்களை விரும்புகின்றனர். ஆனால் வறண்ட சருமத்திற்கு திக்கர் கிரீம் அல்லது ஆயின்மென்ட் ஆயில் - பேஸ்டு கலவைகள் தேவைப்படுகின்றன, அவை ஈரப்பதத்தை சருமத்தில் லாக் செய்கின்றன. சருமத்தை ஈரப்பதமாக்க ஹைலூரோனிக் ஆசிட் , டைமெதிகோன் போன்றவை அடங்கிய தயாரிப்புகள் சாதாரண மற்றும் வறண்ட சருமம் என இரண்டிற்குமே பொருந்தும்.

பொதுவாக பகல் மற்றும் இரவில் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தும்போது, பகலில் லைட்டான ஒன்றையும், இரவில் ஹெவியான ஒன்றையும் தேர்வு செய்யலாம். எந்தவொரு ஸ்கின் டைப் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் செய்யவேண்டியது குளித்த அல்லது முகத்தை கழுவிய 5 நிமிடங்களுக்குள் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதே. இப்பழக்கம் தோலில் இருந்து டிரான்ஸ் எபிடெர்மல் நீர் (trans epidermal water) இழப்பை தடுக்க உதவுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Moisturizer

அடுத்த செய்தி