ரம்ஜானுக்கு எப்படி மேக்கப் போட்டு அசத்தலாம்..? இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

ரம்ஜான் கொண்டாட்டத்தில் உங்கள் முகம் பிரகாசமாய் மின்ன மேக்கப் எப்படி போடுவது என்று பார்க்கலாம்.

ரம்ஜானுக்கு எப்படி மேக்கப் போட்டு அசத்தலாம்..? இந்த ஸ்டெப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!
மேக்அப் டிப்ஸ்
  • Share this:
கிளென்சர் மற்றும் டோனர் அவசியம் : முகத்தில் வடியும் இயற்கையான எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்குகள் முகத்தில் தேங்கியிருந்தால் உங்கள் மேக்கப்பைத் திட்டுத் திட்டாகவும், பொலிவிழந்தாகவும் மாற்றிவிடும். அதற்கு கிளென்ஸரைப் பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய் பிசுக்கை முற்றிலுமாக நீக்க வேண்டும். பிறகு டோனர் (ரோஸ் வாட்டர் சிறந்தது) பயன்படுத்தி முகத்தில் பொலிவைக் கூட்டலாம்.

மாய்ஸ்சரைஸர் அல்லது பிரைமர் :  அடுத்ததாக அடர்த்தி அதிகம் இல்லாத லேசான மாய்ஸ்சரைஸர் க்ரீம் அல்லது பிரைமரை அப்ளை செய்யுங்கள். 2 நிமிடங்கள் பொருத்திருந்து அதன் பிறகு மேக்அப் பொருட்களை அப்ளை செய்யுங்கள்.

நீண்ட நேரம் தாங்கும் பவுண்டேஷன் :  உங்கள் சரும நிறத்திற்கு ஏற்ப பவுண்டேஷனை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். பவுண்டேஷன் அப்ளை செய்யும்போது முகத்தில் கைகளைக் கொண்டு தேய்க்காமல் பவுண்டேஷன் பஞ்சுகள் பயன்படுத்தி சீராக பிளெண்ட் செய்யுங்கள். அதுதான் சீரான மேக்அப் தோற்றத்தை உண்டாக்கும்.
வண்ணங்கள் அளிக்கும் பிளஷ் :  பண்டிகையில் பிளஷ் இல்லையெனில் அது முழுமையான மேக்அப் ஆகாது. எனவே பண்டிகைக்கு ஏற்ற வகையில் தங்க நிற பிளஷை தேர்வு செய்யுங்கள். க்ரீம் தன்மைக் கொண்ட பிளஷ் உபயோகியுங்கள். பிளஷ் அப்ளை செய்வதற்கு தரமான ஸ்பாஞ்ச் அல்லது பிரஷ் பயன்படுத்துங்கள்.

லைட் வெயிட் பவுடர் :  பவுடர் உங்கள் மேக்அப் அதிக நேரம் நீடிக்க உதவும். குறிப்பாக லைட் வெயிட் கொண்டதாக வாங்குங்கள். அதேபோல் பவுடர் பிரஷ் நீளமாக இருப்பது அவசியம். இது உங்கள் எண்ணெய் வடியும் பகுதிகளில் கிடைத்த நேரத்தில் டச்சப் செய்ய ஏதுவாக இருக்கும்.

லிப்ஸ்டிக் லிப் லைனர் தேவை :  அதிக வேலைபாடுகள் கொண்ட ஆடைகளை அணியும்போது சிவப்பு, பிங்க் என பளீர் நிறங்களை தேர்வு செய்வதுதான் சிறப்பாக இருக்கும். உங்கள் சரும நிறத்திற்கு பொருத்தமான லிப்ஸ்டிக்கைத் தேர்வு செய்யுங்கள். அதற்கு முன் லிப் லைனரும் வாங்குங்கள். இதனால் உங்கள் உதட்டின் தோற்றம் மெருகேறும். நீங்கள் அப்ளை செய்யும் லிப்ஸ்டிக்கால் இன்னும் தூக்கலாக இருக்கும்.

நீண்ட நேரம் தாங்கக் கூடிய காஜல் :  ஐ மேக் அப்பிற்கு நீண்ட நேரம் நீடிக்கக் கூடிய திட்டுகளை ஏற்படுத்தாத மற்றும் வாட்டர் ப்ரூஃப் கொண்ட ஐ லைனர் மற்றும் காஜல் வாங்குங்கள். ஐ லைனர் இரண்டு கோட்டிங் போதுமானது. அதிகமான கோட்டிங் ஸ்மஜாகி விடும்.

கூடுதல் டிப்ஸ் :  மேக் அப் முடிந்ததும் இறுதியாக கண்களின் அடிப்பகுதி முகம் முழுவதும் மீதமுள்ள பவுடரை தட்டி விடுங்கள். இதனால் பவுடர் அதிகமாகி பேய் மாதிரி இல்லாமல் இருக்கும்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, http://tamilcms.news18.com/wp-admin/post.php?post=242571&action=edit
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

பார்க்க :

 
First published: May 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading